பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/828

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

perilaryngitis

827

perineorrhaphy


perilaryngitis : குரல்வளை சுற்றழற்சி : குரல்வளையைச் சூழ்ந்து உள்ள திசுக்களின் அழற்சி.

perilymph : உட்செவிப் புறநநிணநீர்; சுற்று வடிநீர் : உட்செவியில் எலும்புத் துளைக்கும் சவ்வுத் துளைக்கும் இடையிலுள்ள நீர்மம்.

perilymphangitis : நிணநாளச் சுற்றழற்சி : ஒரு நிணநாளத்தைச் சூழ்ந்துள்ள திசுக்களின் அழற்சி.

perimetrium : கருப்பை மெல்லுறை; கருப்பை சீதப்படலுறை; கருப்பை புறச் சவ்வு : கருப்பையை மூடியுள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப்பை.

perimyelitis : மச்சைச் சுற்றழற்சி : 1. தண்டுவடத்தின் சிலந்தியுரு உரை மற்றும் உள்ளுறையழற்சி. 2. எலும்பின் மச்சைக் குழி வறையைச் சுற்றியுள்ள படல அழற்சி.

perimyositis : தசைச்சுற்றழற்சி : ஒரு தசையைச் சுற்றியுள்ள இணைப்புத் திசுவழற்சி.

perimysitis : தசையிழைநாருறையழற்சி : இயக்கு தசையிழைக் கட்டுகள் ஒவ்வொன்றையும் சுற்றியுள்ள நாருறை அழற்சி.

perimysium : நீளத்தசை சூழ்இணைப்புத் திசுப்படலம் : இயக்கு தசையிழைகளின் முதன்மைக் கட்டுகள் ஒவ்வொன் றைச் சூழ்ந்துள்ள நாருறை.

perinatal : பேறுகாலம்; நான்கு வாரக்கரு : குழந்தை பிறப்பதற்கு முந்திய சில வாரங்களுக்கும், குழந்தை பிறந்த பிறகு சில வாரங்களுக்குமிடைப்பட்ட கால அளவு.

perinatology : குழந்தையியல் : முதிர்கரு மற்றும் புத்திளம் குழந்தையின் பிறப்புப்பின் கால கவனிப்புப் பற்றிய குழந்தை மருத்துவத்தின் சிறப்புப் பகுதி.

perineocoele : யோனிக்குழாய்ப் பிதுக்கம் : நேர்குடலுக்கும் சிறு நீர்ப்பைக்கும் அல்லது நேர்க் குடலுக்கும் யோனித்துளைக்கும் இடையே உள்ள (தொடையிடைப்) மறைவிடப் பகுதியில் தோன்றும் பிதுக்கம்.

perineometer : யோனிக்குழாய் அழுத்தமானி : இடுப்புக் குழித்தளத் தசைகள் சுருங்கும் வலிமையைப் பதிவு செய்வதற்காகப் பெண்ணின் கருப்பை வாய்க் குழாயினுள் (யோனிக் குழாய்) செருகப்படும் ஒர் அழுத்தமானி.

perineorrhaphy : விடப இணைப்பு அறுவை; மூலாதாரத் தைப்பு : கிழிந்த விடபத்தை (ஆசனம்) சீர்படுத்துவதற்கான அறுவை மருத்துவம்.