பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/829

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

perineotomy

828

periodontal disease


perineotomy : பிறப்புப் பாதை அறுவை; மூலாதார வெட்டு : பிறப்புப் பாதையில் அறுவை மருத்துவம் செய்தல்; மேல் வெட்டு அறுவை.

perinephric : சிறுநீரகம் சூழ்ந்த; சிறுநீரகப் புறம் : சிறுநீரகத்தைச் சுற்றியுள்ள.

perinephrium : சிறுநீரகச்சுற்றழற்சி : சிறுநீரகத்தைச் சுற்றியுள்ள கொழுப்பு, இணைப்புத் திசுக்களின் அழற்சி.

perineurium : நரம்புச் சுற்றழற்சி : ஒரு மையவிலகிய நரம்பின் தனித்தனி இழைக்கட்டுகளின் நாருறை.

perineum : விடபம்; கருவாய்ச் சூழல்; மூலத்தானம்; மூலாதாரம்; ஆசனம் : பெண்ணின் இடுப்புக் குழியின் வெளிவாய், பெண்புறவுறுப்பு உள்ளிட்ட உடற்பகுதி இடுப்பெலும்பு முன்பாலப் பகுதிக்குக் கீழே தொடையின் இடைப்பகுதி.

period : 1. வழக்கமாக நடை பெறும் நிகழ்வுகள் அல்லது இயற்காட்சிகளுக்கிடையேயுள்ள நேரம், 2. பெண்களின் மாதப் போக்கு 3. ஒரு நோய் அல்லது நோய் நிலை பாதிக்கும் நேரம்.

periodic breathing : இடைவெளி மூச்சோட்டம் : பிறந்த குழந்தைக்கு 5-10 வினாடி நேரம் மூச்சு நின்று மீண்டும் மூச்சு வருதல், மீண்டும் மூச்சு வரும் போது குழந்தை நிமிடத்திற்கு 50-60 தடவை மூச்சுவிடும். இது 18-15 வினாடிகள் நீடிக்கும். மொத்தத்தில் நிமிடத்திற்கு 30-40 தடவை மூச்சோட்டம் நடைபெறும் விட்டுவிட்டு மூச்சு.

periodicity : பருவ நிகழ்வு : வழக்கமாக குறிப்பிட்ட இடை வேளைகளில் திரும்ப வரும் தன்மை.

periodontal : பற்புறம் சார்ந்த : பல்லைச்சுற்றி, பற்காழ் பற்றிய.

periodontics : பற்புறத்திசுவியல் : பற்களைச் சுற்றிலும் அமைந்து உள்ள திசுக்களைப் பற்றிய, பல் மருத்துவப் பிரிவுகளின் ஒரு பாடம்.

periodontitis : பற்புறத்திசுவழற்சி : ஈறுகளின் அழற்சி, பல் எலும்புச் சுற்றும் பற்குழி எலும்பும் காரையும் தேய்ந்தழிதல் போன்றவை நிகழும் பல்லைச் சுற்றிலுமிருந்து தாங்கும் திசுக்களின் நோய். இதனால், ஈறுகள் தேய்ந்து பற்கள் பிடிப்பிழந்து ஆடுதல்.

periodontal disease : பற்குழி நோய் : பற்குழித் திசுக்களில் ஏற்படும் வீக்கம். பல்லின் வேரைச் சுற்றியுள்ள சவ்வும், எலும்பும் படிப்படியாக நலி வுறுவதால் இது உண்டாகிறது.