பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

aerosporin

82

afibrinogenaemia


கட்டுப்படுத்துவதற்கும், தோலில் தெளிப்பதற்கும் சில வகை தூசித் தெளிப்பான்கள் பயன்படுகின்றன.

aerosporin : ஏரோஸ்போரின் : 'பாலிமிக்சின்-B' என்ற மருந்தின் வணிகப் பெயர்.

aesculapius : எஸ்கலபியஸ் : ரோமானியரின் மருத்துவக் கடவுள்.

aesthetics : அழகியற் கோட்பாடு.

aetiology : நோய் முதல் ஆய்வியல்; நோய்க் காரண ஆய்வியல்; நோய்க்காரணவியல் : நோய்க் காரணம் பற்றி ஆராயும் அறிவியல் துறை.

afe brile : காய்ச்சலின்மை; காய்ச்சலற்ற.

affect : செயல் தூண்டுணர்ச்சி; தாக்கம் : உடல் உணர்ச்சியின் இன்ப துன்ப நிலை.

affection : உணர்வுநிலை : உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் போது உண்டாகும் மனப்போக்கு, மனநிலை அல்லது உணர்ச்சி.

affective : உணர்ச்சி சார்ந்த : உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும்போது உண்டாகும் மனப்போக்குகள் அல்லது உணர்ச்சிகள் தொடர்பான 'உணர்ச்சிப் பைத்தியம்' என்று ஒரு முக்கிய மனநிலைக் கோளாறாகும். பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான உணர்ச்சி அல்லது மனநிலைச் சீர் குலைவுக்கு ஆளாகிறார்கள்.

afferent : அகமுக நோக்கிய; நடு ஈர்ப்புவழி : நரம்பு மையங்களுக்கு உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற.

afferentfibre : ஈர்ப்பு இழைமம்.

afferent nerve : உணர்ச்சி நரம்பு : மூளைக்கும் தண்டு வடத்திற்கும் உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற நரம்பு.

afferent neuron : ஈர்ப்பு நரம்பு இழைமம்.

afferent vesses: இதய நோக்குக் குழாய்.

affiliation : மூலம் காண்டல் : முறையற்ற வகையில் பிறந்த குழந்தையைத் தந்தை இன்னாரென்று கண்டுபிடித்து அவரிடம் சேர்த்தல்.

affinity : இணைப்பீர்ப்பு; நாட்டம் : இரண்டு பொருள்கள் வேதியியல் முறையில் இணைதல். (எ-டு) ஆக்சிஜன், சிவப்பணு (ஹமோகுளோபின்).

afflux: விரைவூட்டம்.

affusion : நீர்ப்பீச்சல்.

afibrinogenaemia : குருதி உறையாமை : குருதிக்கட்டு