பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/830

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pancystitis

829

periostosis


periodontium : பற் புறத்திசுக்கள் : பற்களைச் சுற்றிலுமிருந்து தாங்கும் திசுக்கள். அவையாவன, ஈறுகள், பற்காரை, பற்சுற்றுப் படலம் மற்றும் பல்குழி எலும்பு.

periodontosis : பற்புறத்திசுத் தேய்வு : பற்புறத்திசுக்கள் தேய்ந் தழிவதால் பற்கள் ஆடுவதும் இடம்பெயர்வதும் நிகழ்தல்.

perionychia : நகமடிப்பு; வீக்கம்; நகத்தடிச் சீழ்க்கட்டி : நகமடிப்பு களைச் சுற்றிச் சிவப்பு நிறமான வலியுண்டாக்கும் வீக்கம் ஏற்படுதல். நீரில் அதிக நேரம் புழங்கும் கைகளிலும், இரத்தவோட்டம் குறைவாகவுள்ள கைகளிலும் பெரும்பாலும் ஏற்படுகிறது. ஒரு வகைப் பூஞ்சணக் கிருமி இதற்குக் காரணம். முன்பு இந்தக் கிருமிகளைக் கட்டுப்படுத்தி வந்த உயிரிகளை ஒடுக்கிவிடும் உயிர் எதிர்ப் பொருள்களைப் பயன்படுத்துவதால் இப்போது உண்டாகிறது.

perioophoritis : (முட்டைப்) சூற்பைச் சுற்றழற்சி : முட்டைப் பையைச் சுற்றிலுமுள்ள திசுக்களின் அழற்சி.

perioperative : அறுவை மருத்துவக் காலம் : அறுவை மருத்துவம் நடைபெறுங்காலத்தையும், அறுவை மருத்துவத்துக்கு முந்திய பிந்தியகாலங்களையும் உள்ளடக்கிய கால அளவு.

peripheral nervous system : புற நரம்பு மண்டலம்.

perioptometry : பார்வைப் பரப்புமானி : காட்சிப் பரப்பின் எல்லைகளை அளத்தல்.

perioral : வாய்த் தோல் அழற்சி; வாயைச் சுற்றி : வாயைச் சுற்றி உள்ள தோலில் ஏற்படும் செந்நிறச் சிதளுடன்கூடிய அழற்சி. வயதுவந்த இளம் பெண்களுக்கு இது பெரும்பாலும் உண்டாகிறது. முக ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் இது ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.

periorbita : பற்குழிச்சுற்றுப்பகுதி : பற்குழி எலும்புகளின் என்புச்சுற் றுப்படலம் பற்குழிப்படலம்.

periosteomyelitis : எலும்பு மச்சைச் சுற்றழற்சி : எலும்புடன் என்பு சுற்றுப் படலம் மற்றும் எலும்பு மச்சையின் அழற்சி.

periosteum : எலும்புச் சவ்வு; எலும்புறை; எலும்புப் புறம் : எலும்புகளை மூடியுள்ள சவ்வு. எலும்புகள் புதிதாக வளர்வதற்கு இந்தப் பாதுகாப்பு இன்றியமையாததாகும்.

periostitis : எலும்புச் சவ்வழற்சி; எலும்புறை அழற்சி : எலும்பு களை முடியுள்ள சவ்வில் ஏற்படும் வீக்கம்.

periostosis : எலும்பழற்சி : எலும்பு சுற்றுப்படலத்தில் இயல்பல்லாத எலும்புப்படிவு.