பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/834

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

permeation

833

perprimanm int.


உயிரணுப் படலங்களின் வழியே எந்த அளவுக்கு ஊடுருவிச் செல்லக்கூடியவை என்ற திறன்.

permeation : ஊடுருவல் : ஒரு உறுப்பு, திசு அல்லது வெளி ஊடுருவிப் பரவுதல்.

pernio : பெர்னியோ : குளிரால் தோலில் குருதிக்கட்டி வீங்குதல்.

pernicious anaemia : க்டுங் குருதிச் சோகை; உயிர் போக்கும் குருதிச்சோகை; கொடுஞ்சோகை : மரணம் விளைவிக்கக்கூடிய கடுமையான குருதிச் சோகை நோய்.

perniosis : குளிர்ப்பரு : கடுங்குளிர் காரணமாக உண்டாகும் தோல் பாதிப்பு. குளிர்படும் போது தசைச் சுரிப்பு ஏற்பட்டு இது உண்டாகும்.

perobrachius : கைஊனம் : பிறவியிலிருந்தே முன்கைகள் ஊனமுற்ற ஒருவர்.

perochirus : விரற்குறை : பிறவியிலிருந்தே கை விரல்கள் அல்லது கால் விரல்கள் ஊனமுற்ற ஒருவர்.

perocormus : உடற்குறை : பிறவியிலிருந்தே உடற்பகுதி ஊனமுற்ற ஒருவர்.

perodactylus : பிரற்குறை : பிறவியிலிருந்தே கை விரல்கள் அல்லது கால்விரல்கள் ஊனமுற்ற ஒருவர்.

peroidin : பெராய்டின் : பொட்டாசியம் பெர்க்குளோரேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

peromelia : உறுப்புத் திரிபு; பிறவி உறுப்புக் குறை; முடப் பிறவி : ஒர் உறுப்பு கோரமாகத் திரிபடைந்திருத்தல்.

perora : வாய்வழியே : சிறு குடல் உயிர்ப்பொருள் ஆய்வு போன்று வாய்வழி ஆய்வு.

peroxidase : பெராக்ஸிடேஸ் : பெராக்ஸைடிலுள்ள ஆக்ஸிஜனை, ஆக்ஸிஜன் தேவைப்படும் திசுவுக்கு மாற்றித் தர உதவும் இரும்பு பார்ஃபைரின் நொதி.

peroxide : பெராக்சைடு : ஹைட்ரஜன் பெராச்சைடு.

peroxisome : பெராக்ஸிசோம் : கல்லீரல் மற்றும் சிறுநீரக அணுக்களில் செறிந்துள்ள, பெராக்ஸிடேஸ், கேட்டலேஸ் மற்றும் டிஅமைனோ ஆக்ஸிடேஸ் கொண்ட படலம் சூழ்ந்த சவ்வுப்பைகள்.

Perphenazine : பெர்ஃபினாசின் : உறக்கமூட்டுதல், நோவகற்றும் மருந்து.

perprimam intentionem : முதல் நிலையிலே காயம் ஆறுதல்.