பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/838

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

peyronie's disease

837

phagosome


நோய் தோன்றுமிடம். இவற்றைத் திரன் நிணநீர்க்கரணைகள் என்றும் கூறுவர்.

peyronie's disease : பெய்ரோனி நோய் : பிரெஞ்சு அறுவை மருத்துவர் ஃப்ரேன் காய்ஸ் பெயர் கொண்ட நோயில் ஆண் குறியின் பிழம்பு இறுகியிருப்பதால் ஆண்குறி நார்கட்டி சுருங்குதல்.

phacoanaphylaxis : விழிவில்லை ஒவ்வாமை : விழிவில்லைப் புரதம் வில்லை யுறையை விட்டு வெளியேறுவதால் ஏற்படும் மிகை உணர்வு.

phacocystectomy : விழிவில்லையுறை நீக்கம் : கண்புரை நோய்க்காக வில்லையுறையின் ஒரு பகுதியை அறுத்து நீக்குதல்.

phacocystitis : விழிவில்லையுறையழற்சி : விழிவில்லையுறையின் அழற்சி.

phacoemulsification : விழிவில்லை கூழாக்கி நீக்கல் : குறையெண் கேளா ஒலி அதிர்வுகளைக் கொண்டு புரைநோய் வில்லையை சிறுதுண்டுகளாக்கி கூழாக்கி உறிஞ்சி வெளியேற்றும் முறை.

phacolysis : விழிவில்லையை அறுவை மருத்துவம் மூலம் உடைத்து நீக்குதல்.

phacometachoresis : விழிவில்லையை இடமகற்றல்.

phacomatosis : புறத்தோற்கட்டி : புறத்தோலிலிருந்து உருவாகும் திசுக்களில் குறைகட்டிகள் தோன்றும் பிறவி நோய்களின் தொகுதி.

phacosclerosis : விழிவில்லை இறுக்கம்; கடினப்புரை : விழி வில்லை இறுகுதல்.

phacoscope : விழிவில்லை நோக்கி : பார்வைத்தகவமைவின் போது விழிவில்லையில் ஏற்படும் மாற்றங்களைக் காட்டும் கருவி.

phagocytin : விழுங்கணுப் பொருள் : பல்லுரு அணுக்கரு வெள்ளணுக்கணுக்களிலிருந்து பெறப்படும் கிருமியழிப்புப் பொருள்.

phagocyte : துகள் சூழ் உயிரணு; விழுங்கணு; நோய் தடுக்கும் நின நீரணு : பாக்டீரியாக்களையும், மற்ற துகள் பொருள்களையும் சூழ்ந்து கொள்ளும் நிணநீர் உயிரணு; நோயனுக்களை ஈர்த்துக் கொண்டு உடலை நோய்களிலிருந்து காக்கும் ஆற்றலுள்ள நிணநீர் அணு.

phagocytosis : துகள் சூழ் உயிரணு சூழ்தல் : பாக்டீரியாவை அல்லது பிற துகள் பொருள்களைத் துகள் சூழ் உயிரணுக்கள் சூழ்ந்து அணுக்குள் ஈர்த்து உட்கொள்ளல்.

phagosome : துகள்படல சவ்வுப்பை : விழுங்கணுவுள்ளிருக்கும்