பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

afibrnogenemia

83

afterbirth


(இரத்தம் உறைதல்) இன்மை என்னும் ஒரு கடுமையான நோய். இரத்தத்தை இறுகி உறையச் செய்யும் பொருள் போதிய அளவு இல்லாமையால் இது உண்டாகிறது.

afibrnogenemia : இரத்த உறைவு ஆக்கிக் குறைவு : இரத்தத்தில் இரத்த உறைவு ஆக்கி மூலக் கூறுகள் குறைந்த நிலைமை அல்லது இல்லாத நிலைமை. இதன் விளைவாக இரத்தம் உறைதலில் பாதிப்பு ஏற்படும்.

aflatoxin : புற்றுத் தூண்டு பொருள் பூசண நச்சு : வெது வெதுப்பும் ஈரமும் வாய்ந்த தட்ப வெப்ப நிலைகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலக்கடலை, கார்போஹைட்ரேட் உணவுகள் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடிய ஒரு வகைப் பூஞ்சைக் காளானிலுள்ள புற்றுநோய் வளரத் துண்டுதல் செய்யும் பொருளின் வளர்சிதைமாற்றப் பொருள்கள். இவற்றில் நான்கு முக்கிய பிரிவுகள் உண்டு B1, B2, G1, G2, மனிதரின் நுரையீரல் உயிரணுக்களில் இந்தப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் போதுமான செரிமானப் பொருள்கள் (என்சைம்) உள்ளன. இது நுரையீரல் புற்றுநோய் பீடிப் பதற்கு முன் அறிகுறியாகும்.

aflotoxicosis : பூசண நச்சேற்றம் : பூஞ்சன உணவுகளை உட் கொள்வதால் உடலில் உண்டாகும் நச்சேற்ற நோய். முக்கியமாக பஞ்சம், வறுமை போன்றவை காரணமாக உணவு கிடைக்காதபோது, இத்தகைய காளான் உணவுகளை மனிதர்கள் உட்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். அப்போது இந்த நோய் உண்டாகும். இந்த நச்சேற்ற நோயின்போது நோயாளிக்குக் கல்லீரல் பாதிப்படையும்; கல்லீரல் வீங்கும்; அல்லது சுருங்கிவிடும். கல்லீரலில் கட்டி உண்டாகும். மஞ்சள் காமாலை ஏற்படும்.

africanhorse sickness : ஆஃப்ரிக்கக் குதிரை நோய்.

afterbirth : பேறுகால கொடி; நச்சுக் கொடி : குழந்தை பிறந்த பின்பு கருப்பையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கொடி மற்றும் சவ்வுகள்.

கருவில் வளரும் குழந்தை தாயிடமிருந்து உணவும் ஆக்சிஜனும் பெறுவதற்கு உதவும் உறுப்பு. குழந்தை பிறந்த பின்பு இது தாயிடம் இருந்து வெளியே வந்துவிடும். இதனுடன் குழந்தை உருவாகும் கருப்பையின் உள்படலமும் வெளிவரும். இவை இரண்டும் சேர்ந்து 'பேறுகால இளங் கொடி' எனப்படும்.

aftercare : பிற்காப்பு : மருத்துவத்துக்குப் பின் பேணுவது :