பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/840

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pharmaceutics

839

pharyngeal pouch


மருந்து விற்பனைத் தொழில் தொடர்பான.

pharmaceutics : மருந்தாக்கவியல்; மருந்தாக்கியல்.

pharmacist : மருந்தாக்குனர்; மருந்து கலப்போர் : மருந்துக் கடைக்காரர், மருந்தாளுனர்.

pharmacogenetics : மருந்து விளைவு : மருந்துகளினால் உண்டாகும் பக்க விளைவுகள்.

pharmacoangiography : மருந்து செலுத்தி நாளவரைவு : நாள விரிப்பு அல்லது நாளச் சுருக்கப்பொருள்களை உட்செலுத்துவதன் மூலம் ஒரு நாளப் படத்தை நன்கு தெளிவாகப் பார்க்க முடியாது.

pharmacodynamics : மருந்தியக்கம் : ஒரு மருந்துப்பொருளின் ஒரு குறிப்பிட்ட செறிவளவு, அது செயல்படும் இடத்தில் ஏற்படும் விளைவுகளைக் கண்டறிதல்.

pharmacognosy : மருந்து மூல இயல் : இயற்கையில் கிடைக்கும் மருந்துகள், அவற்றின் குண இயல்புகள், அதன் மூலம் போன்றவற்றை விளக்கும் மருந்தியலின் பிரிவு.

pharmacokinetics : மருந்தடையும் மாற்றம்; மருந்து ஈர்ப்பியல் : உடலில் மருந்துகள் எவ்வாறு ஈர்த்துக் கொள்ளப்படுகின்றன. எவ்வாறு பகிர்ந்தளிக்கப் படுகின்றன, எவ்வாறு வெளியேற்றப் படுகின்றன என்பதை ஆராய்தல்.

pharmacologist : மருந்தியல் வல்லுநர் : மருந்தியலில் படிப்புத்தகுதி பெற்ற ஒருவர், மருந்துகள் மற்றும் சிகிச்சைப் பொருள்களை மதிப்பிடவும், ஆராய்ச்சியும் மேற்கொள்பவர்.

pharmacology : மருந்தியல்; மருந்துப் பொருளியல் : மருந்துப் பொருள்கள் பற்றி ஆராயும் அறிவியல்.

pharacopia : வாகட நூல்; மருந்தியல் முறை நூல் : மருந்துப் பொருள்களின் விவர நூல் தொகுதி.

pharmacopys chosis : மருந்து வழி மனநோய் : ஒரு மருந்து, ஆல்கஹால் அல்லது ஒரு நச்சுப்பொருளால் ஏற்படும் மனநிலைக் கோளாறு.

pharmacotherapy : மருந்து மருத்துவம் : நோய்களுக்கு மருந்துகளைக் கொண்டு மருத்துவமளித்தல்.

pharmacy : மருந்தகம்; மருந்தாக்க நிலையம் : மருந்துக் கடை, மருந்தாக்கக் கலை.

pharyngeal pouch : தொண்டைப்பை; தொண்டைக்குழி; தொண்