பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/841

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pharyngectomy

840

pharynx


டைசார் : தொண்டையின் கீழ்ப்பகுதியை நோய்க் குறியியல் முறையில் விரிவாக்குதல்.

pharyngectomy : தொண்டை அறுவை : தொண்டையின் ஒரு பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

pharyngismus : தொண்டை இசிப்பு ; தொண்டை தசையிசிப்பு.

pharyngitis : தொண்டை அழற்சி.

pharyngocele : அடித்தொண்டையில் (பை போன்ற) புழை.

pharyngoconjunctival fever : தொண்டை விழிவெண்படலக் காய்ச்சல் : குழந்தைகளில் அடினோவைரஸ், சில சமயம் காக்ஸேகிவைரஸால் ஏற்படும் தொற்றால் காய்ச்சல், தொண்டையழற்சி, விழி வெண்படல அழற்சி.

pharyngolaryngeal : தொண்டை குரல் வளை : தொண்டை மற்றும் குரல்வளை சார்ந்த.

pharyngomycosis : தொண்டைப் பூஞ்சைத் தொற்று : தொண்டையில் பூஞ்சைக் காளானால் தொற்று.

pharyngooesophageal : தொண்டை; உணவுக்குழல்சார் : தொண்டை மற்றும் உணவுக் குழலுக்குத் தொடர்புடைய.

pharyngoplasty : தொண்டை ஒட்டு அறுவை : தொண்டையில் செய்யப்படும் இணைப்பு அறுவை மருத்துவம்.

pharyngotomy : தொண்டையழற்சி அறுவை; தொண்டைத் திறப்பு : தொண்டையில் உண்டாகும் அழற்சியைக் குணப்படுத்த சீழ்வடிக்கச் செய்யப் படும் மருத்துவம்.

pharynx : தொண்டை : உள் தொண்டை வாயின் பின்பகுதியிலுள்ள குழிவு. இது கூப்பு வடிவில் இருக்கும். இதன் நீளம் சராசரி 75 செ.மீ. இதன்