பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/842

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

phasal

841

phenindione


கீழ்ப்பகுதியில் சளிச்சவ்வுப் படலப் பூச்சு இருக்கும். மேற்பகுதி உணவுக் குழாய்ப் பக்கமாகத் திறந்திருக்கும்.

phasal : ஃபாசல் : லிதியம் கார்போனேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

phase : படிநிலை : 1. வளர்ச்சி அல்லது மாற்றம் ஏற்படும் போதுள்ள படிநிலைகளில் ஒன்று. 2. பல படித்தான தொகுதிகளிலிருந்து பிரிக்கப் படக்கூடிய ஒரு படித்தான பொருள். 3. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளுக் கிடையேயுள்ள கால நேரத் தொடர்பு.

phase contrast microscope : நுண்ணோக்கி மாறு பாட்டுப் படிநிலை : ஒளிவிலகல் அளவுகளிலுள்ள வேறுபாடுகளை ஒளித்திறன் வேறுபாடுகளாக மாற்றுவதன் மூலம் கட்டமைப்பு விவரங்களை நன்கு பார்க்க உதவும் நுண்ணோக்கி (உருப்பெருக்கி).

PHC : தொடக்கச் சுகாதாரக் கவனிப்பு.

phenacetin : காய்ச்சல் தடுப்பு மருந்து; ஃபெனாசெட்டின் : முன்பு நோவகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட மருந்து. இதனை நீண்டகாலம் பயன் படுத்தினால் சிறுநீரகங்கள் சேதமடைவதால், இப்போது இதற்குப் பதிலாக பாராசிட்டாமோல் என்ற மருந்து பயன் படுத்தப்படுகிறது; காய்ச்சல் தடுக்கும் மருந்து.

phenazone : ஃபெனாசோன் : பெனாசெட்டின் போன்ற மென்மையான நோவகற்றும் மருந்து. இதன் நச்சு விளைவுகள் காரணமாக இது அரி தாகவே பயன்படுத்தப்படுகிறது.

phemazocine : ஃபெனாசோசின் : கடுமையான வலிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வீரியம் மிகுந்த நோவகற்றும் மருந்து,

phenazopyridine hydrochłoride : ஃபெனாசோப்பைரிடீன் ஹைட்ரோகுளோரைடு : சிறுநீர்க் குழாயில் ஏற்படும் நோவை அகற்றும் மருந்து. சிறுநீர்ப்பை அழற்சிக்குப் பயன்படுகிறது.

phenergan : `ஃபெனர்கான் : புரோமித்தாசின் ஹைட்ரோ குளோரைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

phenethicillin : ஃபெனத்திசிலின் : ஒர் மருந்து, பென்சிலினுக்குப் பதிலாக வாய்வழி கொடுக்கப் படுகிறது.

phenindione : ஃபெனிண்டியோன் : இரத்த உறைவுக்கு எதிராக வாய்வழி கொடுக்கப்படும் மருந்து குருதியுறைவுக்கோளாறு.