பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/846

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pancystitis

845

phlyctenule


phiebolithiasis : சிரைக்கல் : சிரைச் சுவரில் கால்சியத் துகள் பதிந்து வளருதல்.

phlebomanometer : சிரைமானி : சிரை இரத்த அழுத்தத்தை அளக்கும் அழுத்தமானி.

phlebosclerosis : சிரையிறுக்கம் : சிரைச்சுவர்களின் நாரிழை இறுக்கம்.

phlebostasis : சிரைத்தேக்கம் : 1. சிரைகளில் இரத்தம் மிகவும் மெதுவாகப் பாய்தல், 2. கால், கையுறுப்புகளின் சிரைகளை ஒரு அழுத்தப்பட்டை கொண்டு அழுத்துவதன் மூலம் சிரைவழி இரத்தம் இதயத்துக்குத் திரும்புவதை தற்காலிகமாகத் தடை செய்தல்.

phlebotomy : குருதி வடிப்பு; சிரைத் திறப்பு : மருத்துவ முறையில் குருதியை வடித்தல்.

phlebothrombosis : சிரைக் குருதிக்கட்டு; சிரைப்படிம உறைவு; உட்சிறைக் குருதி; உறை படிமம் : இதயத்திற்குக் குருதியைக் கொண்டு செல்லும் சிரை என்னும் குருதி நாளத்தில் ஏற்படும் இரத்த கட்டு, சிரை யில் மெதுவாக குருதி பாய்வதால் இது உண்டாகிறது. பெரும்பாலும் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிக்கு இது உண்டாகிறது.

phlebotomist : குருதி வடிப்பு வல்லுநர் : குருதியை வடிக்கும் மருத்துவத்தில் வல்லுநர்.

phlebotomus : குருதியுறிஞ்சி : குருதியுறிஞ்சு பூச்சிரைக் குருதி வடிகாய்ச்சல், தோலில் லீஷ் மேனியாசிஸ் மற்றும் கருங்காய்ச்சல் போன்ற வியாதிகளை உண்டுபண்ணும் குருதியுறிஞ்சிக் குடிக்கும் பூச்சி வகைகளில் ஒரு இனம்.

phlegm : சளி; கோழை; கபம் : மூச்சுக் குழாயிலிருந்து வெளி யேற்றப்படும் கபம், சளி கோழை.

phlegmagogue : சளி மருந்து : கபத்தை வெளிப்படுத்தும் மருந்து.

phlegmatic : மடிமை மனிதன் : எளிதில் செயற்படாத அல்லது எளிதில் உணர்ச்சிவயப்படாத மனிதன்.

phlegmon : அழற்சிக் கட்டி; பரு.

phlogistic : அழற்சியுடைய.

phlyctena : தீக்கொப்புளம் : முதல்நிலை தீப்புண்களில் ஏற்படும் ஒரு சிறுநீர்க் கொப்புளம்.

phlyctenule : இமை கொப்புளம்; நுண்குமிழ் : இமையிணைப் படலத்தில் அல்லது விழிவெண் படலத்தில் ஏற்படும் நுண்ணிய கொப்புளம்.