பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/847

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

phobia

846

phonosurgery


phobia : காரணமில்லா அச்சவுணர்வு; அச்ச நோய் மருட்சி; மருளியம் : நோய்த் தன்மையுடைய அச்சக்கோளாறு வெறுப்புக் கோளாறு. எடுத்துக்காட்டு : இதயநோய் பற்றிய அச்சம்; புற்றுநோய் குறித்த அச்சம்.

phocomelia : கோர உறுப்புத் திரிபு; கை கால் வளர்ச்சியின்மை; கை-கால் உருப்பெறாமை : கைகளும், கால்களும் திரிபடைந்து கடல் நாய் (சீல்) போன்று தோற்றமளித்தல். 1960-களில், கருவுற்ற பெண்கள் தாலிடோமைடு என்ற மருந்துச் சந்தைக்குப் புதிதாக வந்த துயிலுாட்டும் மருந்தை உட்கொண்டதால் குழந்தைகள் இத்தகை உறுப்புத் திரிபுடன் பிறந்தன.

phocodine : ஃபோக்கோடின் : இருமல் உண்டாகும் மையத்தைச் சமனப்படுத்தும் மருந்து. கோடைன் போன்ற குணமுடையது. சளியில்லாத வறட்டு இருமலுக்குக் கொடுக்கப்படுகிறது.

phonation : ஒலி செய்தல்; சொல்லொலி : குரல்வளை நாளங்களின் அதிர்வினால் உண்டாகும் ஒலி.

phonendoscope : உள்ளொலி பெருக்கி : கேட்பொலிகளை பெருக்கிக் காட்டும் ஒரு இதயத் துடிப்புமானி.

phoniatrics : ஒலியவியல் : பேச்சு மற்றும் பேச்சுப் பழக்கங்களைப் பற்றிக் கூறும் அறிவியல்.

phonocardiography : இதய ஒலி வரைவியல் : இதயத்தின் ஒலி களையும், முணுமுணுப்புகளையும் மின்னியல் பதிவுமூலம் வரைபடமாகப் பதிவு செய்தல். இதன்மூலம், கருவிலுள்ள குழந்தையின் இதயத்துடிப்பு வீதம், கருப்பைச் சுருக்கத்துடன் அதன் தொடர்பு ஆகியவற்றைத் தொடர்ந்து அளவிடலாம்.

phonomyoclonus : தசைதுடிப்பொலி : கேட்பொலிக்கருவி மூலம் கேட்கமுடியக்கூடிய தசையிழைத் துடிப்புகள்.

phonomyography : தசையொலிப்பதிவு : தசை கருங்கும் போது ஏற்படும் ஒலிகளைப் பதிவு செய்தல்.

phonostethograph : கேட்பொலிப்பதிவு கருவி : மூச்சியக்க ஒலிகளைப் பெருக்கிக் காட்டும் கருவி.

phonosurgery : ஒலிசீர் அறுவை : குரலின் தரம், தொனி, வளம் ஆகியவற்றை அதிகப்படுத்துவதற்காக குரல்நாண்கள் அவற்றை அடுத்துள்ள திசுக்களில் செலுத்தப்படும் அறுவை மருத்துவ முறை.