பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/848

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Phoparan disease

847

phosphorus


Phoparan disease : ஃபோப்பரான் வியாதி : இந்தியாவில் உள்ள லடாக் பகுதியிலுள்ள ஒரு இராணுவ தளமான ஃபோப்பரான் பெயரால் அழைக்கப் படும் வியாதி. இதில் ஆக்ஸிஜன், குறை, வெள்ளணு மிகைக் குருதி, துரையீரல் தமனி இரத்தக்கொதிப்பு, வலது இதயக் கீழறைப் பெருக்கம் மற்றும் சிறுநீரில் பெருமளவு புரதம் ஆகியவை காணப்படுகின்றன. இவ்வியாதி இமய மலையில் குடியேறியவர்களில் அந்த உயர்மட்ட தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்ப உடல் பழக்கப்படுத்திக் கொள்ள முடியாததால் ஏற்படுகிறது.

phosphataemia : ஃபாஸ்ஃபேட் மிகைக் குருதி : குருதியில் கரியமில ஃபாஸ்ஃபேட்டுகள் அதிக அளவிலிருத்தல்.

phosphaturia : சிறுநீரில் ஃபாஸ்ஃபேட்; ஃபாஸ்பேட் நீரிழிவு : சிறு நீரில் அளவுக்குமீறிப் ஃபாஸ்ஃபேட்டுகள் இருத்தல்.

phosphene : விழித்திரை ஒளிவளையம் : கண்விழித் திரையில் எரிச்சல் ஏற்படுவதனால் கண்விழி அழுத்தப்படுவதன் காரணமாக ஏற்படும் ஒளி வளையங்கள்.

phosphodiesterase : ஃபாஸ்ஃபோடயெஸ்டெரேஸ் : சைக்ளிக் அடினோசின் மோனோஃபாஸ் பேட்டை சிதைய வினையூக்கியாக செயல்படும் நொதி.

phospholine iodide : ஃபாஸ்ஃபோலின் அயோடைடு : கோலி னெஸ்டிராசுக்கு எதிரான ஒரு மருந்து.

phospholipid : ஃபாஸ்ஃபோலைப்பிடு : ஃபாஸ்ஃபரஸ் கொண்ட கொழுப்பி, அவை லெசித்தினும், ஸ்ஃபிங்கோ மையலினும் ஆகும். உயிரணுப் படலத்தின் கொழுப்புப் பகுதி பெரும்பாலும் ஃபாஸ்ஃபோ லைப்பிடுகள் ஆகும்.

phosphonecrosis : குழித்தாடை : தீப்பெட்டித் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஏற்படும் குழிவுத்தாடை ஃபாஸ்ஃபரஸ் காரணமாக பற்கள் இற்றுப் போய் இந்தத் தாடையெலும்புச் சீரழிவு ஏற்படுகிறது.

phosphoric acid : ஃபாஸ்ஃபோரிக் அமிலம் : இது ஒரு கரைப்பான் ஆகும். அழிந்த திசு எச்சங்களை நீக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நீர்த்த கரைசல் ஆகும்.

phosphorus : ஃபாஸ்ஃபரஸ் (எரியம்) : எலும்பு, நரம்புத் திசுக்களின் முக்கிய அமைப்பானாக அமைந்துள்ள ஓர் அலோகத் தனிமம்.