பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/851

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

photoreactivation

850

phrenicotomy


photoreactivation : ஒளி மீள் செயலாக்கம் : முன்பு செயலிழந்த ஒரு செய்முறையை ஒளியின் மூலம் மீண்டும் செயல்படுத்தல்.

photoreceptor : ஒளியேற்பி : விழித்திரைத்தண்டுகளும் கூம்புகளும் போன்ற ஒளியால் கூருணர்வு பெறும் ஏற்பி.

photoretinitis : ஒளிவிழித்திரையழற்சி : சூரிய ஒளி அல்லது வேறு கூரொளிக்கு மிகுதியும் ஆட்படுவதால் ஏற்படும் விழியை எரிபுண்ணால் பார்வைக் கூர்மை குறைதல்.

photoscan : ஒளித்தேடுபடம் : (சின்ட்டிஸ்கேன்) உடலிலுள்ள ஒரு உறுப்பை ரேடியோ ஐசோடோப் கொண்டு உருப்படுத்தலின் பிரதிபிம்பம்.

photosensitive : ஒளியுணர்வு; ஒளிக்கூச்சம் : ஒளிபட்டதும் தூண்டுதல் பெறும் இயல்பு; கண்ணிலுள்ள நிறமிகள் இத் தன்மையுடையவை.

photosensitivity : ஒளிக்கூரு உணர்வு : சூரிய ஒளிபடுதலால் ஏற்படும் ஒரு தோல் தடிப்பு போன்ற இயல்பற்ற விளைவு.

photosynthesis : ஒளீணைப்பாக்கம் : தாவரங்களும் சில நுண்ணுயிர்களும், சூரிய ஒளியிலிருந்து குளோரோஃபில் நிறமி பெற்ற ஆற்றலைக்கொண்டு, கரியமிலவாயுவையும் நீரையும் இணைத்து கார்போ ஹைட்ரேட்டை உருவாக்கும் செய்முறை.

phototherapy : ஒளி மருத்துவம் : செயற்கையான ஊதா ஒளி. பாய்ச்சி நோய் மருத்துவம் செய்தல், பிறந்த குழந்தைகளுக்கும், குறைமாதக் குழந்தைகளுக்கும் ஏற்படும் மஞ்சட் காமாலை நோயைக் குணப் படுத்த இந்த மருத்துவம் அளிக்கப்படுகிறது.

phototoxic : ஒளிநச்சு : ஒளிபடுவதால் ஏற்படும் தீங்கு தரும் விளைவு உண்டாக்குவது பற்றியது.

phototropism : ஒளியசைவு : ஒரு உயிரி, ஒளியை நோக்கி அல்லது ஒளியிலிருந்து விலகிச் செல்லும் அசைவு.

phren : உதரவிதானம் : வயிற்றின் உந்து தசை.

phreniclasia : உதரவிதான தசை செயலிழப்பு : இடைத்திரை நரம்பு ஒரு பற்றுக் கருவி கொண்டு நசுக்குவதால், இடைத்திரைத் தசை செய லிழத்தல்.

phrenicotomy : உதரவிதானப் பிளப்பு : உதரவிதானத்தின் ஒரு பகுதியைச் செயலிழக்கச் செய்யும் உதரவிதான நரம்புப் பிளவு.