பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/853

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

physiotherapy

852

pica


நோயால் மற்றும் ஏற்படுவது பற்றியது.

physiotherapy : இயல் மருத்துவம்; உடற்பயிற்சி மருத்துவம் : உடலைப் பிடித்து விடுதல், தூயகாற்று, மின்சாரம் போன்ற இயற்கை முறைகளால் மருத்துவம் செய்யும் முறை.

physiotherapist : இயல் மருத்துவர்; மின் மருத்துவர் : பிடித்து விடுதல் போன்ற இயற்கை முறைகளால் நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவர்.

physique : உடரற்கட்டு; உடலமைவு : உடலமைப்பு உடலின் கட்டுக் கோப்பு.

physohaematometra : வளியக்குருதிக் கருப்பை : கர்ப்பப்பைக் குழிவறை வாயு மற்றும் குருதி வாய் நிறைந்துள்ள நிலை.

physophydrometra : வாயு நீர்ப்பை : கர்ப்பப்பைக் குழிவறை, வாயு மற்றும் சீர் நீர்மத்தால் விரிதல்.

physostigmine : ஃபைசோஸ்டிக்மைன் : கண்விழி விறைப்பு நோயில் சொட்டு மருந்தாகப் (0.5%-1%) பயன்படுத்தப்படும் மருந்து. சில சமயம் வாதநோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன் படுகிறது.

physohorax : சுவாசப்பை உறைச்சீழ் நோய் : சுவாசப்பை உறையில் உண்டாகும் சீழ்நோய்.

phytobezoar : காய்கனியிழைப்பந்து : பழத்தோல், விதைகள் காய்கனியிழைகள் ஒன்றிணைந்து ஒரு பந்து போல் இரைப்பையில் உருவாதல்.

phytohaemagglutinin : தாவர குருதித் திரள்புரதம் : தாவரங்களி லிருந்து பெறும் ஒரு ஃபைட் டோமைட்டோஜென், சிவப்பணுக்களை ஒட்டித்திரள வைக்கிறது.

phytol : ஃபைட்டால் : குளோரோஃபில்லில் இருந்து பெறப்படும் நிறை செறிவூட்டப் பெறாத அவிஃபேட்டிக் ஆல்கஹால் வைட்டமின்-ஈ மற்றும் கேயை இணைப்புருவாக்கப் பயன்படுகிறது.

phytomenadione : ஃபைட்டோமினாடியோன் : வைட்டமின் 'கே' என்னும் ஊட்டச்சத்து, பிறந்த குழந்தைக்கு இரத்தக் கசிவு ஏற்படும் போதும் வைட்டமின்-'கே' பற்றாக்குறையின்போதும் கொடுக்கப்றபடுகிறது.

pia, pia mater : மூளை நாளப்படலம்; மூளை உள்ளுறை; மென்னுறை : மூளை வெளியுறைகளில் மிகவும் உள்ளார்ந்திருக்கிற செல்குழாய் நாளப்படலம். இது மூளையிலும், முதுகந்தண்டிலும் அடங்கியுள்ள பொருளுடன் நெருங்கிய தொடர்புடையது.

pica : மசக்கை; இயல்பிலா உணவு வேட்கை; கண்டது உண்ணல் :