பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/854

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Pick's disease

853

pigmentation


கருவுற்றிருக்கும்போது சாம்பல் போன்ற அசாதாரணப் பொருள்களை உண்ண வேண்டுமென உண்டாகும் வேட்கை.

Pick's disease : பிக் வியாதி : நெற்றி மடலையும் பொட்டு மடலையும் பாதிக்கும், முன் முதுமை மனக்குழப்பம். செக் கோஸ்லோவேக்கிய மருத்துவர் அர்னால்டுபிக் பெயரைப் பெற்ற இந்நோயில் ஆளுமை மாற்றம் காணப்படுகிறது.

picolax : பிக்கோலாக்ஸ் : சோடியம் பிக்கோசல்ஃபேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

picornovirus : பிக்கார்னோருச்சுயிர் : மிகவும் சிறிய உறையிடம் கொண்ட நச்சுயிர்.

picric acid : பிக்ரிக் அமிலம் : தீப்புண், கரப்பான், அரிப்புப் புண்களுக்கு தடவப் பயன்படும் ட்ரைநைட்ரோஃபீனால்.

picrotoxin : பிக்ரோ நச்சு : பாப்பிட்யுரேட் நஞ்சு நிலையில் மைய நரம்பு மற்றும் மூச்சியக்கத் தூண்டியாக முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு கசப்புப் பொருள், அனாமிர்ட்டா காக்குலஸின் விதையிலிருந்து பெறப்பட்டது.

piedra : மயிர்பூஞ்சன நோய் : தாடி, மீசையின் பூஞ்சக் காளான் நோயில் பூஞ்சை உறை போன்ற சிறு கழலைத் திரள்களை உருவாக்குகிறது.

piesthesia : அழுத்துணர்வு : அழுத்தத் தூண்டல்களை அறிந்து கொள்ளும் உணர்வு.

piesimeter : அழுத்தமானி : அழுத்தத்தை தோலுணரும் கூருணர்வை அளக்கும் கருவி.

piezoelectric crystals : அழுத்த மின்படிகங்கள் : படிகங்கள் உருவிழக்கும்போது விளைவிக்கும் மின்னேற்றப் பகுதிப் பிரிப்பு.

pigeon chest (pigeon-breast) : குறுகல் மார்பு; கூட்டு மார்பு; புறா மார்பு : உருவத்திரிபாகக் குறுகலாக அமைந்த மார்பு, இதில் மார்பக எலும்புப் பகுதி முன்புறம் துருத்திக்கொண்டிருக்கும்.

pigeon fancier's lung : புறா நேசிகளின் நுரையீரல் : புறாவைச் சீரப்புரதங் மனிதர்களில் புறாக் கழிவுகளின் ஏற்படும் கூருணர்வால் விளையும் ஒவ்வாமைக் காற்று நுண்ணுறை அழற்சி.

pigment : நிறமி; தோல் நிறமி; வண்ணம் : உடலின் இயற்கை வண்ணப் பொருள், சாயப் பொருள்.

pigmentary epithelium : நிறமி அடர் புறப்படலம்.

pigmentary layer : நிறமி அடுக்கு.

pigmentation : நிறமி அடுக்குப் படிவு; கரைப் படிப்பு : நிறமி