பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/856

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pineal

855

pinta


pineal : நடுமுளை : 1. ஊசியிலைக் கூம்பு போன்ற வடிவ முடைய. 2. பைனியல் சுரப்பி தொடர்பான 3 ஆளானவர்களில் மண்டை எக்ஸ்ரே படத்தில் கால்சியமாதல் குறிப்பால் காட்டும் மூளை இட விலகல்கள்.

pineal body (pineal gland) : நடுமூளைச்சுரப்பி : மூளையின் நடுவில் மூன்றாவது குழிவின் பின் கூம்பு வடிவான சிறிய செம்பழுப்பு நிறச் சுரப்பி. இதன் செயல் என்ன என்பது இன்னும் அறியப்படவில்லை.

pinealoblastoma : பைனியலோ பிளாஸ்டோமா : பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் அல்லது இளம் நபர்களில் உண்டாகும் பைனியல் சுரப்பிக் கொடும்புற்று.

pinealocyte : பைனியலணு : ஒரு வெளுப்பு நிற அணுக்கூழ்மம் கொண்ட இயக்குநீர்களை உருவாக்கும் பைனியல் சுரப்பியின் முக்கிய உயிரணு.

pinealoma : பைனியல்கட்டி : ஒரு உறையிடப் பெற்ற பைனியல் சுரப்பிக் கட்டியால் வயதுக்கு வருமுன் பருவமடைதல்.

ping-ponging : பின்ங்-பாங் பந்து : இரண்டு நபர்களுக்குள் குறிப்பாக பாலுறவால் பரவும் டிரைக்கோமோனாஸ் வெஜைனாலிஸ் தொற்றுநோய் பரவுதல். முதல் நபர் குணடைந்தாலும் இரண்டாவது நபர் மூலம் மீள் தொற்றுப் பெறுவது பிங்பாங் பந்துடன் ஒப்பிடப்படுகிறது.

pinguicula : பின்கிக்குலா : விழி வெண்படலத்துக்கடியில் கருவிழி ஒரத்துக்கருகே, கொல்லாஜன் அழிவால் ஏற்படும் மஞ்சள் நிறத்தடித்த பரப்பு.

pink-eye : செங்கண் நோய் : மிக விரைவாகப் பரவும் செந்நிறக் கண் கோளாறு. குழந்தை நெருங்கிப் பழகும் உணவு வசதிகளுடைய பள்ளிகள், நீண்ட காலம் தங்கி மருத்துவம் பெறும் மருத்துவமனைகளில் முகத்துணிகளைப் புழங்குவதால் இது உண்டாகிறது.

pinna : காதுமடல்; வெளிக்காது; செவிமடல் : புறச் செவியின் அகன்ற மேற்பகுதி.

pinocytosis : பினோசைட்டோசிஸ் : உயிரணுக்கள் நீர்மத்தை உள்ளெடுத்து சிறுநீர்க் கொப்புளங்களை உருவாக்கும் முறை.

pinpoint : ஊசிமுனை : 1. ஒரு ஊசியின் முனை. 2. அந்த அளவுக்கு கண்ணின் பாவை மிகவும் சுருங்குதல்.

pinta : பின்ட்டா : டிரெப்பொனிமா கெரட்டியம் எனும் சுருள் உயிரியால் உண்டாகும் பால்வினையாலல்லாத நோய்.