பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/857

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pioepithelium

856

pit


நேரடி சீதச் சவ்வுத் தோலுக்குள் புகுவதால் பரவுகிறது.

pioepithelium : கொழுப்புறத் தோலியம் : கொழுப்புக் குறு கோளங்கள் கொண்ட புறத் தோலியம்.

pipe : குழல் : தண்ணிர், வாயு அல்லது ஆவியை கொண்டு செல்லப் பயன்படும் உலோகம், மரம் அல்லது பிற பொருளாலான ஒரு வெற்று உள்ளிட உருளை.

piperacillin sodium : பிப்பராசிலின் சோடியம் : பல்வேறு வகையில் செயற்படக்கூடிய ஒர் உயிர் எதிர்ப்பொருள். நச்சுத் தன்மை குறைந்தது. பாக்டீரியா இதனை எதிர்ப்பது குறைவு.

piperazine citrate : பிப்பராசின் சைட்ரேட் : குழந்தைகளின் மலக் குடலில் உள்ள நூலிழை போன்ற கீரைக்பூச்சி என்ற புழு, உருண்டைப்புழு ஆகிய வற்றுக்கு எதிராகக் கொடுக்கப்படும் வீரியம் மிக்க குடற்புழு அகற்றும் மருந்து.

pipette : நீர்ம அளவுக்கருவி : ஒரு கலத்திலிருந்தும் மற்றொரு கலத்திற்கு, நீர்மங்களை அளந்து மாற்றியூற்றப் பயன்படும் இரு புறமும் திறந்த ஒரு ஒடுக்கமான அளவிடப்பட்ட கண்ணாடிக்குழாய்.

pipri : பிப்ரில் : பிப்பராசிலின் சோடியம் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

pirenzepine : பைரன்செப்பின் : வயிற்றில் சீழ்ப்புண்ணைக் (அல்சர்) குணப்படுத்தும் உயிரணுக்களை உற்பத்தி செய்து அமில உற்பத்தியைக் குறைக்கக்கூடிய ஒரு மருந்து.

piriton : பிரிட்டோன் : குளோர் ஃபெனிராமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

piroxicam : பைரோக்சிக்காம் : வீக்கத்தைத் தணிக்கக்கூடிய ஒரு மருந்து.

Pirquet's test : பிர்குவெட் சோதனை : ஆஸ்திரிய குழந்தை மருத்துவர் செமென்ஸ் பிர்குவெட் பெயராலமைந்த, ஒரு ட்யூபெர்குலின் தோல் சோதனை.

pitch : தார்; கருவண்டல் : 1. ஒரு அணிவகுப்பில் வைத்தல் அல்லது நிலைநிறுத்தல், 2. அலைகள் உண்டாக்கும் அதிர்வுகளின் அலைவெண் பொறுத்து அமையும் ஒலியின்தரம், 3. நிலக்கரி வடித் திறக்கிய பின் உள்ள எச்சம்.

pitressin : பிட்ரெசின் : வாசோப் பிரெசின் என்ற அமினோபுரத மருந்து.

pit : அம்மைத்தழும்பு : அம்மை நோயினால் உடலில் உண்டாகும்