பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

aganglionosis

85

ageusia


aganglionosis : நரம்புக் கணு இன்மை : மங்கிய சாம்பல் நிறமாகப் பொருள் நிரம்பிய நரம்பு மண்டல மையங்கள் இல்லாதிருத்தல்.

agar : கடற்கோரைக் கூழ்; அகர்; (அகர்-அகர் : கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ். இது, பேதி மருந்தாகவும், பாக்டீரியா வளர்ப்புக் கலவை நீர்மத்தைத் திடமாக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.

agastria : இரைப்பை இல்லாத.

agastric : உணவுப்பாதையின்மை; இரைப்பையின்மை : பிறக்கும் போது அல்லது அதற்குப் பின்னர் இரைப்பை இல்லா திருத்தல்; உணவுப்பாதை இல்லாதிருத்தல்.

agate : அகேட் பளிங்கு.

agave : கருங்கற்றாழை.

age : முதுமை; அகவை; வயது : வாழ்நாள்; ஆயுள்; வயது; பருவம் முதிர்ச்சி. இது உள்ள முதிர்ச்சி, உடல் முதிர்ச்சி என இருவகைப்படும்.

ageism : முதிர்ச்சி வகைப்பாடு : கால வரிசைப்படியான வயதுக் கிணங்க மக்களை வகைப் படுத்துதல். ஆக்க முறையான அம்சங்களை விட்டுவிட்டு, எதிர்மறை அம்சங்களுக்கு அளவுக்கு மேல் முக்கியத்துவம் கொடுத்தல்.

agenesia : உறுப்பின்மை; உறுப்பு வடிவம் பெறாமை : உறுப்பு வளர்ச்சியடைவதில் பாதிப்பு ஏற்பட்டு, அது முழுமையான, முறையான வளர்ச்சியைப் பெறாதிருத்தல் அல்லது உறுப்பே இல்லாதிருத்ததல்.

agenesis : குறை வளர்ச்சி; உறுப்பு வடிவு பெறாமை : முழுமை பெறாத குறையுற்ற வளர்ச்சி.

agenitalism : இனப்பெருக்க உறுப்பு இல்லாமை : பிறவி யிலேயே இனப்பெருக்க உறுப்பு இல்லாதிருத்தல்.

agenosomia : அடிவயிறு இன்மை; பிறவி அடிவயிறு இன்மை : அடிவயிறும் அதைச் சார்ந்த இனப்பெருக்க உறுப்புகளும் பிறவியிலேயே இல்லாதிருத்தல் அல்லது குறைபாடுடன் வளர்ச்சி அடைதல்.

agent : இயக்கி; செயல்முதலி; முகவர்; பிரதிநிதி; முகவு : ஒரு குறப்பிட்ட செயலை இயக்குபவர்; இயக்கும் பொருள்.

நோய்க்காரணி : ஒரு குறிப்பிட்ட நோய்க்குக் காரண கர்த்தாவாக விளங்கும் ஒரு ஜடப்பொருள் அல்லது உயிர்ப் பொருள்.

agerasia : முதிரா முதுமை; மூப்பில் இளமை.

ageusia : சுவை மாற்ற உணர் விலா.