பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/862

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

plasmin

861

plastic surgery


plasmin : பிளாஸ்மின் : ஒரு ஃபைப்ரினோலிசின்.

plasminogen : பிளாஸ்மினோஜன் : பிளாஸ்மினின் முன்னோடி, சேதமடைந்த திசுவிலிருந்து வினையூக்கிகள் வெளிப்பட்டு, பிளாஸ்மினோ ஜனைப் பிளாஸ்மினாக மாற்ற ஊக்குவிக்கிறது.

plasmocyte : பிளாஸ்மோசைட் : எலும்புமச்சை, இணைப்புத்திசு மற்றும் சில சமயம் குருதி நீரில் காணப்படும் இயல்பு மாறிய வெள்ளணு ஊநீரணு மச்சைப் புற்றில் பெருமளவில் காணப்படுவதாகும்.

plasmodium: ஒட்டுயிர் நுண்மம் : வெப்ப இரத்தப் பிராணிகளின் இரத்தத்திலுள்ள ஓரணு உயிர் ஒட்டுண்ணிகளில் ஒருவகை. இவை ஒட்டுத்தோடுடைய இணைப்புடலிகளின் இரத்தத்தை உறிஞ்சி தங்கள் பாலினச் சுழற்சியை முடித்துக் கொள்கின்றன. இவற்றின் நான்கு இனங்கள் மனிதரிடம் முறைக் காய்ச்சல் (மலேரியா) நோயை உண்டாக்குகின்றன.

plasmolysis : ஊன்ம உலர்வு; ஊன்ம நசிவு; அழிவு : நீரிழப்பால் உண்டாகும் ஊன்மச் சுருக்கம்.

plasmoptysis : ஊன்மப்பிதுக்கம் : உயிரணுவுக்குள் மிகுந்த ஊடு பரவழுத்தம் காரணமாக உயிரணுச் சுவர்கிழிந்து, ஊன்மம் வெடித்து வெளிவருதல்.

plastein : பிளாஸ்டைன் : தொடர்ந்து புரதங்களின் செரிப்பைப் புரதமழி நொதிகள் உண்டாக்கும் பாலிபெப்டைடுகள்.

plaster : சாந்துப்பொருள் : 1. சூடுபடுத்த்ப்படும்போது தடவப் பயன்படுத்தும் திடப்பொருள், உடல் வெப்பத்தில் ஒட்டிக்கொள்ளக் கூடியதாகிறது. 2. உடலில் விளைவுகளை ஏற்படுத்துவதற்காக உடல்பரப்பில் மருந்துகளை தடவுவதற்காக பயன்படுத்தப்படும் தடவு பொருள்.

plastering : மருத்தவக்கட்டிடுதல் : மருத்துவக்கட்டுக் கட்டி மருத் துவம் செய்தல்.

plaster of paris : களிக்கல் தூள் : வார்ப்புக் குடுவையாகவும் காரை மண்ணாகவும் பயன்படும் களிக்கல் தூள்.

plastic : பிளாஸ்டிக் (வார்ப்பியம்; குழைமம் : 1. நெகிழ்வுடைய, வார்க்கப்படும் சக்திபடைத்த 2. ஒரு குழிவறை அல்லது வார்ப்பு உருவமைக்க உதவும் ஒரு செயற்கை சேர்மப்பொருள்.

plastic surgery : ஒட்டுறுப்பு அறுவை; ஒட்டறுவை மருத்துவம் : உடலில் சேதமடைந்த பகுதியைச்