பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/863

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

platelets

862

platyhelminthes


சீர்படுத்துவதற்கு ஆரோக்கியமான திசுவை மாற்றிப் பொருத்தும் அறுவை மருத்துவம்.

platelets : தகட்டணுக்கள்; குருதிவட்டுகள்; தட்டயம்கள்.

plastid : பிளாஸ்டைடு : தாவர அணுக்களில் காணப்படும் உயிரணுக்கூழ்ம உறுப்பகங்கள்.

plate : தட்டு : 1. ஒரு எலும்பின் மெல்லிய தட்டையான பகுதி. 2. நுண்ணுயிர்களின் வளர்மத்திற்குப் பயன்படும் ஒரு ஆழமற்ற மூடிகொண்ட தட்டு. 3. ஒருவளர்மத் தட்டில் நுண்ணுயிர்களை ஊசி மூலம் செலுத்துதல்.

plateletpheresis : தட்டணுச்சீர்மம் : ஒரு கொடையாளரின் குருதியில் இருந்து தட்டணுக்களை வெளியெடுத்துவிட்டு மீதமுள்ள இரத்தத்தை உடலுக்குள் திரும்பச் செலுத்தும் செய்முறை.

plating : வளர்சுளம் : ஒரு வளர்ம ஊடகத்துக்குள், நுண்ணுயிர் களை ஊசிமூலம் செலுத்துதல்.

platinic : பிளாட்டினிக் : நான்கு இணைதிறன் கொண்ட பிளாட்டினத்தை உள்ளடக்கிய கூட்டுப்பொருள்.

platinosis : பிளாட்டினோசிஸ் : பிளாட்டின உப்புக்களின் தொடர் பால் தோலிலும் மூச்சுப்பாதையிலும் ஏற்படும் ஒவ்வாமை மறிவினை.

platinous : பிாாட்டினஸ் : இரண்டு இணைதிறன் கொண்ட பிளாட் டினம் உள்ள ஒரு கூட்டுப்பொருள்.

platinum : பிளாட்டினம் : எளிதில் அரிக்கப்பட முடியாத ஒருகன மான வெள்ளி போன்ற வெண் உலோகம். அதன் குறியீடு Pt எனப்படும்.

platonic : ஆன்ம ஈர்ப்புடைய : பாலுறவுத் தொடர்பு இல்லாத இருவருக்குள் உள்ள நெருக்கமான தொடர்பு.

platybasia : தட்டைத்தளம் : மண்டையோட்டின் அடிப்பக்கம், கழுத்து முள்ளெலும்பின் மேல் அழுந்திப் பொருந்தியிருக்கும் உடற்கூடு.

platycoelous : தட்டைக்கோயலோஸ் : முதுகெலும்புடைய விலங்கினங்களில் போன்று வயிற்றுப்புறம் குழிந்தும், முதுகுப்புறம் குவிந்துமிருத்தல்.

platycephalous : தட்டைக்கபால் : 70-க்கும் குறைவான, செங்குத்துக் குறியீடு கொண்டு அகல மண்டையோடு.

platyhelminth : குடற்புழு : குடலிலுள்ள தட்டையான புழு.

platyhelminthes : தட்டைக்குடற் புழுக்கள் : ஒட்டுண்ணிப்புழுக்கள் மற்றும் நாடாப்புழுக்கள் உள்ளிட்ட தட்டைப் புழுக்களினம்.