பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/864

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

play therapist

863

pleura


play therapist : விளையாட்டு மருத்துவ வல்லுநர் : குழந்தை களுக்கு விளையாட்டு மூலம் நோய் மருத்துவம் செய்யும் வல்லுநர்.

pledget : மருந்துப்பட்டைத்துணி : 1. நீரை உறிஞ்சிக் காப்பாற்ற பயன்படுத்தப்படும் உறிஞ்சு பருத்தி அல்லது வலைத்துணியான ஒரு சிறு அழுத்திக்கட்டு துணி, 2. மருந்துப் பொருட்களை தோலில் ஒரு பற்றுக் குறடால் பிடிக்கும் ஒரு சிறு பஞ்சுருண்டை.

plegophonia : பிளிகோபோனியா : குரல்வளை தட்டிப்பார்க்கும் போது கேட்கும் ஒரு கேட்பொலி.

pleiotropy : பிளியோட்ராஃபி : உறுப்புத் தொகுதிகள் அல்லது இயக்கங்கள் அல்லது மரபு முத்திரை போன்ற ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போன்ற இயல்பு நிலைகளில் ஒரு மரபணுவால் ஏற்படும் வெவ்வேறு விளைவுகள்.

pleochroic : பிளியோகிரோய்க் : பல்வேறு கோணங்களில் பார்க்கும்போது பல்வேறு நிறங்களைக் காண்பிக்கும் படிகங்களின் தன்மையைக் குறிக்கும்.

pleomorphism : பல்வேறு வடிவ நிலை : 1. ஒரு வாழ்வுச்சுழற்சியில், ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் தோன்றுதல். 2. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வடிவங்கள் உருவாகும் தன்மை.

pleoptics : பிலியோப்டிக்ஸ் : மங்கு பார்வையுள்ள கண்ணுக்குப் பயிற்சி கொடுத்து தூண்டும், கண் பயிற்சிகள்.

plerocercoid : பிலிரோசெர்காய்டு : மீனில் காணப்படும் டைஃபில்லோ போத்ரியம் லேட்டம் எனப்படும் நாடாப் புழுவின் முட்டடைப் புழு நிலை, மனிதர்களால் உண்ணப்படும் முழுவளர்ச்சியடைந்த புழுவாகிறது.

plessesthesia : பிலிஸ்செஸ்தீசியா : உடல்பரப்பின்மேல் இடதுகை நடுவிரலை வைத்து வலதுகை நடுவிரலை வைத்து அழுத்தித் தட்டுதல்.

plethora : குருதிமிகை; நிரம்பு நிலை : குருதி மிகையாக இருத்தல்; மிகு நிறைவு செவ்வணு மிகை.

plethysmograph : குருதி அளவைக்கருவி; குருதிப் பாய்ச்சல் பரும வரைவி; வளி அழுத்த மானி : ஒர் உறுப்பில் பாயும் குருதியைத் துல்லியமாக அளவிடுவதற்கான ஒரு கருவி.

pleura : மார்புவரி; நுரையீரல் உறை; ஈரல்உறை : உள்ளுறுப்பு களைக் கவிந்து போர்த்திய