பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/865

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pleural effusion

864

pleuroscopy


பால் குடி உயிர்களின் உள்வரிச் சவ்வுகள் இரண்டில் ஒன்று.

pleural effusion : நுரையீரல் உறை; நீர்க் கோப்பு.

pieural tumour : நுரையீரலுரைக்கட்டி.

pleurisy pleuritis : நுரையீரல் சவ்வழற்சி : மார்பு உள்வரிச்சவ்வில் ஏற்படும் வீக்கம். நுரையீரல் உறை சீழ் நோயுடன் இது தொடர்புடையது.

pleurocoele : நுரையீரலுரை வீக்கம் : 1. நுரையீரல் மற்றும் நுரையீரலுறைப் பிதுக்கம். 2. நுரையீரலுறைக் குழிவறைக்குள் சீர நீர்கோர்த்தல்.

pleurodesis : உள்ளுறுப்புப் பிணைப்பு : மண்டைப் பக்க எலும்பு உள்வரிச் சவ்வுடன் உட்கிடப்புறுப்புகள் ஒட்டிக் கொண்டிருத்தல் அயோடினாக்கிய வெளிமக்கன்மகியைப் பயன்படுத்தி இவ்வாறு ஒட்டிக் கொண்டு இருக்குமாறு செய்யலாம்.

pleurodynia : தசைவாத வீக்கம்; விலா எலும்பு வலி : கீல்வாதம் தொடர்பான தசைநாரின் வீக்கம்; மார்புத் தசை வாதத்தால் ஏற்படும் வலி நோய்.

pleurophepatitis : நுரையீரலுரை கல்லீரலழற்சி : நுரையீரலுறையும் கல்லீரலும் அழற்சியுறுதல்.

pleurolysis : நுரையீரல் சுவர்ப் படலப் பிரிப்பு : மார்புக்கூட்டு உள்படலத்திலிருந்து நுரையீரலுறையின் கவர்ப்படலத்தைப் பிரித்தெடுத்தல்.

pleuroparietopexy : நுரையீரல் சுவர்ப்படல ஒட்டு : துரையீரலு றையின் உள்ளுறுப்புப் படலத்தையும் சுவர்ப்படலத்தையும் ஒட்டுவதின் மூலம், நுரையீரலை மார்புக் கூட்டுச் சுவருடன் நிலைநிறுத்துதல்.

pleuropericardial : நுரையீரலுறை சார்ந்த : நுரையீரலுறை மற்றும் இதயச் சுற்றுரை பற்றியது.

pleuropneumolysis : நுரையீரல் சுருங்கல் : ஒரு பக்கத்தில் ஒன்று அல்லது அதிக விலா எலும்புகளை வெட்டியெடுப்பதன் மூலம் நுரையீரல் சுருங்குதல்.

pleuropneumonia : குலைக் காய்ச்சல் : மார்பு உள்வரிச் சவ் வழற்சியுடன் கூடிய குலைக் காய்ச்சல் நோய்.

pleuropulmonary : மார்பு வரி நுரையீரல் சார்ந்த : மார்பு உள்வரிச் சவ்வு, நுரையீரல் இரண்டையும சார்ந்த.

pleuroscopy : நுரையீரல் உறையறை நோக்கியல் : நுரையீரலுறை நோக்கி ஒரு நுரையீரலுறை நோக்கி கொண்டு அல்லது ஒரு வளையக்கூடிய இழை ஒளி மூச்சுப் பிரிகுழல்நோக்கி கொண்டு துரையீரலுறைப் பரப்பைப் பார்த்தறிதல்.