பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/866

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pfeurothotonus

865

plumbum


pleurothotonus : பக்கவளைப்பு : உடல் ஒரு பக்கமாக வளையும் படியான விரைப்பு இசிப்பு.

pleximeter : தட்டுக்கொட்டுமானி : ஒருஊடுதட்டுதலில் தட்டு சுத்தி அல்லது விரலால் தட்டுவதை உணர்வதற்காக உடற்பரப்பின் மேல்வைக்கப்படும் விரல் அல்லது கருவி.

plexopathy : பின்னல் கோளாறு : கைகளுக்கான அல்லது புடைத் திரிக நரம்புப் பின்னலை காயம் அல்லது கதிரியக்க மருத்துவம் அல்லது கொடும்புற்றுத்தாக்கத்தால் பாதிக்கப்படும் கோளாறு.

plexor : தட்டுக் கொட்டல் : நோயறிதலில் தட்டியறியும் போது தட்டுக்கொட்டு மானியாகப் பயன்படுத்தப்படும் விரல் அல்லது சுத்தி.

plexus : பின்னலமைவு; பின்னல் வலை : நாளங்களின் அல்லது நரம்புகளின் பின்னல் அமைவு.

plica : தோல் மடிப்பு: மடிப்பு :' சவ்வின் மடிப்பு.

plica polonica : தலைமுடிச்சடைப் பிடிப்பு : நோய் காரணமாக ஏற் படும் தலை மயிரின் சடைப்பிடிப்பு.

plicotomy : மடிப்பறுவை : செவிப்பறையின்பின் மடிப்பை பிளந்து அறுவை மருத்துவம் செய்தல்.

plinth : பீடம் : உடற்பயிற்சி செய்யும் பொழுது நோயாளி உட்கார அல்லது படுக்கப் பயன்படுத்தும் மேசை அல்லது இருக்கை அல்லது சாதனம்.

ploidy : மடியமுடைமை : ஒரு உயிரணுவிலுள்ள (இலங்கைத்) தொகுதிகளின் இனக்கீற்று எண்ணிக்கை ஒரு மடியம், இரு மடியம், மும்மடியம் என ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று இனக்கீற்று இணைகள் அழைக்கப்படுகின்றன.

plombage : ப்ளாம்பேஜ் : ஒரு நோயுற்ற துரையீரலை சுருங்கச் செய்வதற்காக மார்புக் கூட்டுச் சுவரிலிருந்து நுரையீரலுறையின் சுவர்ப்படலத்தை உரித்தெடுத்து அந்த இடத்தை சிறிய பிளாஸ்டிக் உருண்டைகளைக்கொண்டு நிரப்பும் முறை.

plugger : அடைப்பான் : பற்குழிக்குள் ஒரு தங்கத்தகட்டிழை அல்லது ரசக்கலவையை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் கருவி.

plumbism :ஈய நச்சூட்டு; ஈய நச்சேற்றம்.

plumbage : மெழுகு வைப்பு.

plumbum : காரீயம்; ஈயம் : உலோக ஈயத்தின் லத்தீன் பெயர்.