பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/868

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pneumaturia

867

pneumoencephalo..


வாயுக்களால் உண்டாகும் நோய்களுக்கான மருத்துவம்.

pneumaturia : சிறுநீர்வாயு; சிறுநீர் வளிமம்; வளி நீரிழிவு : சிறுநீருடன் குடல் வாய்வு பிரிதல். இது சவ்வுப்பைப்புரை காரணமாக ஏற்படுகிறது.

pneumatype : வளிப்பதிவு : வாய்மூடிய நிலையில் மூக்கின் வழியாக மூச்சு வளிவரும்போது ஒரு கண்ணாடியில் படும் ஈரப் பதிவு.

pneumoangiography : வளிநாள வரைபதிவு : ஒருநிறப்பொருள் ஊடகம் கொண்டு நுரையீரலின் நாளங்களை எக்ஸ்ரே படம்பிடித்துப் பார்த்தல்.

pneumobulbar : நுரையீரல் குமிழ் : முகுளத்திலுள்ள நுரையீரல் மற்றும் மூச்சியக்கமையம் பற்றிய.

pneumococcus : சீதசன்னிக் கிருமிகள் : இணை இணையாக அமைந்துள்ள புள்ளிக் கிருமிகள். இவை சீதசன்னியை உண்டு பண்ணுகின்றன.

pneumoconiosis : தூசு அழற்சி; தூசு வளி நோய் : தொழில் துறைப் பணிகளில் தொடர்ந்து தூசியைச் சுவாசிப்பதால் உண்டாகும் நுரையீரல் அழற்சி சில சமயம் காசநோயும் உண்டாகும்.

pneumocystis (carinii) : சீதசன்னி நுண்ணுயிரி : சீதசன்னி எனப்படும் சளிக் காய்ச்சலை உண்டாக்கும் ஒரு நுண்ணுயிர். இது பெரும்பாலும் குழந்தைகளையே பாதிக்கிறது. இதனால் உண்டாகும் வீதம் அதிகம்.

pneumocystography : நீர்ப்பை வளிய வரைவு : சிறுநீர்ப் பைக்குள் காற்றைச் செலுத்திய பிறகு செய்யப்படும் பைப்பட சோதனை.

pneumocyte : வளியணு : காற்றுநுண்ணுறைச் சுவரணு, வகை 1 : மென்சவ்வு சுவரணு, வகை 2 : சர்ஃபக்டன்ட்சுரக்கும் குருணையணு, வகை 3 . அரிதான, கூம்பு வடிவ.

pneumodynamics : மூச்சு இயக்கவியல் : மூச்சியக்கத்தில் பயன்படும் ஆற்றல் பற்றிய படிக்கும் அறிவியல் பிரிவு.

pneumoencephalogram : வளிய மூளை வரைபடம் : வளிய மூளை வரைபதிவின்போது, மூளையின் நீரறைகள் மற்றும் சிலந்தியுரு உறையடி வெளியின் எடுக்கப்படும் எக்ஸ்ரே படம்.

pneumoencephalography : வளிய மூளை வரை பதிவு : மூளை தண்டுவட நீரை வெளியில் எடுத்துவிட்டு, முதுகில் ஊசி