பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

agger

86

aggression


agger : திசுமேடு.

agglomeration : பெருநகரம்.

agglutinant : திரட்சி ஊக்கி : காயத்தின் விரிந்த இரு பகுதிகளை ஒன்றிணைக்கும் பொருள். இணைப்புப்பொருள். உடற்காப்பு ஊக்கியின் துண்டுதலால் உடலில் உருவாகும் எதிர் ஆக்கம்.

agglutinin : திரட்டி; ஒட்டுத்திரணி : இரத்தத்தில் காணப்படும் எதிர் ஆக்கம். இது உடற்காப்பு ஊக்கியுடன் இணைந்து இரத்த அணுக்களைத் திரளச் செய்கிறது. கரிமப் பொருள்களைத் திரட்சியடையச் செய்யும் திறனுள்ள ஒரு பொருள் எதிர் ஆர்ஹெச் (Rh) திரட்டி.

agglutination : குருதியணு ஒட்டுத்திரள்; ஒட்டுத் திரட்சி : முன்னர் நோயுற்ற ஆளின் அல்லது விலங்கின் நிணநீரில் (சீரம்) உருவான 'அணு ஒட்டுப் பொருள்கள்' (அக்ளுட்டின்) எனப்படும் நோய் எதிர்ப்புப் பொருள் களினால் பாக்டீரியா, சிவப்பணுக்கள் அல்லது உயிர்த் தற்காப்புப் பொருள் துகள்கள் ஒன்றாகத் திரண்டு கெட்டியாதல், ஆய்வுக் கூடங்களில் பல பரிசோதனைகளுக்கு இது அடிப்படையாக அமைந்துள்ளது.

agglutinogen : அணு ஒட்டுப் பொருள்; ஒட்டுத் திரட்டி : அணு ஒட்டுப் பொருள்கள் (அக்ளுட்டின்) எனப்படும் நோய் எதிர்ப்புப் பொருள்களின் உற்பத்தியைத் தூண்டுகிற ஒர் உயிர்த் தற்காப்புப் பொருள் (ஆன்டிஜன்). இது தொற்று நோய்களிலிருந்து முழுத்தடைக்காப்பு அளிக்கப் பயன்படுத்தப் படுகிறது. (எ-டு) ஊசி மருந்தில் உள்ள இறந்து போன பாக்டீரியா, நச்சுக் கொல்லிகளிலுள்ள தனிவகைப் புரதம்.

agglutinophilic : திரட்டுப் பண்புள்ள : திரட்சி அடையத் தயாராகக் காத்திருக்கின்ற ஒரு பொருள்.

agglutinoscope : திரட்சி நோக்கி.

aggregate : ஒட்டு மொத்தம்.

aggregation : திரண்ட; மொத்த.

aggregen : கொத்து மொத்தம்.

aggregometer : இரத்த நீர்ம அடர்வு அளவி.

aggressin : பாக்டீரியா முனைப்பு வினை : சிலவகைப் பாக்டீரியாக்கள், தங்களின் ஒட்டுண்ணி ஆதார விலங்குகளுக்கு எதிரான தங்களது வலுத்தாக்குதல் நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவதற்காக உற்பத்தி செய்யும் ஒருவகை வளர்சிதை மாற்றப் பொருள்.

aggression : வலுச்சண்டை உணர்வு தன்முனைப்பு நடத்தை :