பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/874

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

polyalgesia

873

polychromatophilia


polyalgesia : பலவிடவலி : ஒரு பகுதியின் ஒரு தூண்டுதல், பல பகுதிகளில் உணர்வுண்டாக்கல்.

polyandry : பலகணவருடைமை : ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற் பட்ட கணவர்களை வைத்துக் கொள்ளும் பழக்கம்.

polyarteritis : பல தமனி அழற்சி; தமனிகள் அழற்சி : பல தமனி களில் ஏற்படும் வீக்கம் இதனால் பாதிக்கப்பட்ட நாளங் களில் வீக்கமும் குருதியுறைவும் ஏற்படுகிறது. மேற்கொண்டு சேதம் உண்டாகுமானால் இரத்தப் போக்கு ஏற்படுகிறது.

polyarthralgia : பலமூட்டு வலி : பல்வேறு மூட்டுகளிலும் உண் டாகும் நோவு.

polyarthritis : பலமூட்டு அழற்சி; மூட்டுகள் அழற்சி; பன்மூட்டழற்சி : பலமூட்டுகளில் ஒரே சமயத்தில் உண்டாகும் வீக்கம்.

polybactrin : பாலிபாக்ட்ரின் : நியோமைசின் சல்ஃபேட் பாலிமிக்சின்-பி, பாசிட்ராசின் ஆகியவை கலந்த ஒரு கலவையின் வணிகப் பெயர். இது ஒர் உயிர்ப் பொருள் எதிர்ப்புத் தெளிப்பு மருந்து, காயங்கள், அறுவை மருத்துவக் காயங்களைக் குணப்படுத்தப் பயன் படுத்தப்படுகிறது.

poly basic : பல்கார : ஒரு காரத்துடன் சேரும் இரண்டு அல்லது மேற்பட்ட ஹைட்ரஜன் அயனிகளைக் கொண்ட அமிலம்.

polyblast : பல்கருவணு : அழற்சி வெளிப்பாடுகளில் காணப்படும் ஒரு உட்கரு கொண்ட விழுக்கணு.

polycarbophii : பல்கார்போஃபில் : பருப்பொருள் கொண்ட மல மிளக்கியை தயாரிக்கப் பயன்படும் நீரேற்கும் பொருள்.

polychemotherapy : பல்வேதியல் மருத்துவம் : மருத்துவத்தில் ஒரே நேரத்தில் பல வேதியல் பொருள்களைப் பயன்படுத்தல்.

polychromatic : பல்நிற : ஒன்றுக்கு மேற்பட்ட வண்ணங்களில் நிறமேற்றும் பல நிற திசுவியல் சாயங்கள்.

polychromatophi : பல்நிறமேற்பணு : பல சாயங்களால் நிறம்பெறும் ஒரு அணு குறிப்பாக குருதிச் சிவப்பணு.

polychromatophilia : பல்நிறமேற்கும் நிலை : அமில, கார சாயப் பொருள்களில் நிறம் பெறும் அணுக்களின் தன்மை. 2. அமில, கார, நடுநிலை சாயங்களை ஏற்கும் தன்மையை வெளிப்படுத்தும் சிவப்பணு.