பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/876

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

polygnathus

875

polymyalgia rheumatics


polygnathus : இணைத்தாடை : இரட்டையர் அளவு வேறுபட்ட ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளில் சிறியது, பெரிய குழந்தையின் தாடையில் ஒட்டிப் பிணைந்திருத்தல்.

polygraph : பல்வரைவு : 1. ஒரே நேரத்தில், இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சியக்கத்தை பதிந்து காட்டும் கருவி. 2. பொய் கண்டுபிடிப்புக் கருவி, உணர்வு வெளிப்பாடுகளின் குறியிடுகளான உடலியக்க மாற்றங்களைப் பதிவு செய்யும் கருவி.

polyhydramnios : மிகைக் கருச்சவ்வு நீர்மம்; வெகு நீர்ப்பனிக் குடம் : கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வில் சுரக்கும் நீர்மம் அளவுக்கு அதிகமாகச் சுரத்தல்.

polykarysome : பல் உட்கருவணு : ஹெர்பிஸ்சிம்ப்ளெக்ஸ் தொற் றால் தூண்டப்பட்ட செல்களின் ஒட்டிணைப்பால் உருவாகும் பல உட்கரு கொண்ட உயிரணு.

polylysine : பாலிலைசின் : ஒரு பெப்டை இணைந்த இரு லைசின் மூலக்கூறுகளைக் கொண்ட ஒரு பாலிபெப்டைடு.

polymerase : பாலிமெரேஸ் : மீச்சேர்ம இணைவுக்கு உதவும் நொதி (நியூக்ளியோடைடுகளை இணைத்து பல் நியூக்ளியோ டைடுகளை உருவாக்குதல்) உதாரணம் ரிவர்ஸ் டிரான்ஸ் கிரிப்டேஸ் நொதி-ஹெச்.ஐ. வைரஸில் உள்ளது.

polymerisation : மீச்சேர்ம இணைப்பாக்கம் : பல எளிய கூட்டுப் பொருள்கள் ஒன்றிணைந்து அதிக மூலக்கூறெடை கொண்ட ஒரு பொருளை உருவாக்கல்.

polymicrobial : பல்நுண்ணுயிர்சார் : பல இன நுண்ணுயிரிகளில் காணப்படும் நிலை.

polymorphic : பல் உருக்கொண்ட : 1. பல வடிவங்களில் தோன்றும். 2. வளர்ச்சியின் வெவ்வேறு படி நிலைகளில் பல வடிவங்களில் காட்சி தரும்.

polymorphism : பல் உரரு நிலை : 1. இரண்டு வடிவங்களில் தோன் றும் டிஎன்ஏ வரிசை நிலையில் ஒரு பகுதி. 2 ஒன்றுக்கு மேற்பட்ட வடிவில் தோன்றுதல்.

polymyalgia rheumatics : தசைக்கீல் வாதம் : முதியவர்களுக்கு ஏற்படும் ஒரு நோய். இதனால், தோள் பட்டைகளிலும் இடுப்புக்குழித் தசைகளிலும், முது கந்தண்டிலும் கடும் வலி தோன்றும். காலை நேரத்தில்