பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/877

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

polymyoclonus

876

polyp; polyous


தசைப்பிடிப்பும் உண்டாகும். இது கன்னப்பொட்டெலும்பு நாடி அழற்சியுடன் தொடர்புடையது. இது கீல் வாயு மூட்டு வீக்கத்திலிருந்து வேறுபட்டது.

polymyoclonus : பல் தசை துடிப்பு : பல தசைகளும் ஒரே நேரத்தில் அல்லது வேகமாக ஒன்றுக்குப்பின் ஒன்றாக துடிக்கும் தசைச் சுருக்கத் துடிப்பு.

polymyositis : தசை நலிவு : பெரும்பாலும் நடுவயதில் ஏற்படும் தசை நலிவு நோய் தசையில் அழற்சி மாறுபாடுகள் ஏற்படுவதால் இது உண்டாகிறது.

polymyxin B : பாலிமைச்சின்-பி : கிராம்சாயம் எடுக்காத நோய் களுக்குப் பயன்படுத்தப்படும் ஒர் உயிர் எதிர்ப்பொருள். இதனைத் தசை வழி ஊசி மூலம் செலுத்தினால் வலியுண்டாகும் என்பதால், நரம்புவழி, மெல்லமெல்லக் கொடுக்கப்படுகிறது. காது, கண் நோய்களுக்கும் இதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.

polyneural : பல்நரம்பிய : பல நரம்புகளுடன் தொடர்புடைய, பல நரம்புகளால் வழங்கப்படும் அல்லது பல நரம்பு பாதிப்பு.

polyneuritis : பன்முக நரம்பபழற்சி; பல நரம்பழற்சி.

polyneuromyositis : பல்நரம்புத் தசையழற்சி : பல் நரம்பழற்சியும் பல்தசையழற்சியும் ஒன்றாக சேர்ந்து பாதித்த நிலை.

polyneuropathy : பல் நரம்புக் கோளாறு : ஒரே நேரத்தில் பல வெளிப்புற நரம்புகளை பாதிக்கும் நரம்புக் கோளாறு.

polyneuroradiculitis : பல்நரம்பு வேரழற்சி : நரம்பு வேர்கள், வெளிப்புற நரம்புகள், தண்டு வட நரம்பு முடிச்சுகளின் அழற்சி.

polyoma : கட்டிக்கிருமி : கட்டி உண்டாக்கும் கிருமிகளில் ஒன்று.

polyomavirus : பாலியோமா வைரஸ் : பாலியோமா வைரஸ் துணைக் ககுடும்பத்தில் ஒரு உறுப்பு.

polyopia : நல்வடிவக்காட்சி பல் உரு பார்வை : ஒரே பொருளின் பல்வேறு உருக்காட்சிகள் தோன்றும் பார்வைக்கோளாறு.

polyotia : பல்காது : தலையின் ஒன்று அல்லது இரண்டு பக்கமும் மிகையான காது உள்ள ஒருவர்.

polyploidy : பன்மடியம் : சரியான எண்ணிக்கையிலான நிறக்கோல் (இனக்கீற்று) போல் பலமடங்குகொண்ட உயிரணுக்கரு.

polyp; polyous : சவ்வுக் கழலை; விழுது; சவ்வுக்கட்டி : கருப்பை,