பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/878

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

polypectomy

877

polysomnography


மூக்கு போன்ற சளிச்சவ்வுப் பரப்புகளில் உண்டாகும் கழலைக்கட்டி.

polypectomy : தொங்கு தசை அறுவை; விழுது நீக்கம்; விழுது எடுப்பு : தொங்கு தசையை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்; விழுதுத் தடை நீக்கம்.

polypeptides : அமினோ புரதங்கள் : நீரால் பகுக்கும்போது இரண்டுக்கு மேற்பட்ட அமினோ அமிலங்களைக் கொடுக்கும் புரதங்கள்.

polypharmacy : பன்முக மருந்து; பல மருந்து; மருத்துவம் : ஒரே நோயாளிக்கு வாய்வழி உட் கொள்ளப்படும் பல மருந்துகளை எழுதிக்கொடுத்தல். இது நோயாளி மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றாமல் போவதற்கு வழிவகுக்கும்.

polypoid : தொங்கு தசை போன்ற; விழுதுரு; விழுதனைய : தொங்கு தசையை ஒத்திருக்கின்ற.

polyposis : பெருங்குடல் தொங்கு தசை; விழுதியம் : பெருங் குடலில் ஏராளமான தொங்கு தசைகள் இருத்தல். இது பெரும்பாலும் மரபாக ஏற்படுகிறது. இது பொதுவாகப் பெருங்குடல் புற்றுக்கு வழி வகுக்கிறது. தொங்கு தசையை அகற்றுவதே இதைத் தடுப்பதற்குரியவழி.

polypectum : மலக்குடல் தொங்கு தசை.

polypous : காம்புக்கட்டி : ஒரு அல்லது பல காம்புடைக் கட்டிகளைக் கொண்ட தன்மையுடைய.

polypropylene : பாலிபுரோபிலின் : சவ்வு ஆக்சிஜனுட்டுக் கருவி மற்றும் அறுவை மருத்துவ வார்ப்புகளிலும் பயன்படுத் தப்படும் வெப்பத்திலுருகும் செய்பொருளான பாலிமெர்.

polyribosome : பாலிபோசம் : பெப்டைடு உருவாக்கத்தில் பங்குபெறும் செய்தியேந்தி ஆர்.ஏ.வால் இணைக்கப்படும் இரண்டு அல்லது மேலதிகரை போசம்கள்.

polysaccharide : சர்க்கரைச் சேர்மங்கள் (C6.H10 .C5.) : பல்வேறு ஒற்றைச் சர்க்கரைச் சேர்மங்களைக் கொண்டுள்ள கார்போ ஹைட்ரேட்டுகள் மாச்சத்து, இன்சூலின், கிளைக்கோஜன், டெக்ஸ்டிரின், செல்லுலோஸ் ஆகியவை இவ்வகையின.

polyserositis : பன்முக நிண நீர்ச்சவ்வழற்சி : பல்வேறு குருதி நிணநீர்ச்சவ்வுகளில் உண்டாகும் வீக்கம் மரபணு முறையில் உண்டாகும் இவ்வகை அழற்சியை 'மத்திய தரைக் கடல் காய்ச்சல்' என்பர்.

polysomnography : பல் தூக்க வரைபதிவு : பல்வேறு படி