பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

aggressive

87

agonadal


வலியச் சண்டைக்குச் செல்ல முனையத் தூண்டும் கோப முனையத் துண்டும் உணர்வு அல்லது பகையுணர்வு.

aggressive : ஆக்கிரமிக்கும்.

aging : மூப்படைதல்; முதிர்வான; மூப்பேற்றம்; முதுமையுறல் : முதுமையை நோக்கிய வளர்ச்சி முறை. காலத்திற்கேற்ப உடல் அமைப்பில் சிறுகச் சிறுக, தொடர்ச்சியாக மாறுதல்கள் அடையும் நிலை.

agirs : முதிர்சி.

agitated : மனக்குழப்பம்.

agitation : செயல் குழப்ப நிலை; உளக் குழப்ப நிலை : பயம், பதற்றம் நிறைந்த மனஅமைதி யின்மை, குழப்பநிலை.

agitated depression : கிளர்வூட்டும் மனச்சேர்வு : கடும் மனச் சோர்வும் அச்சவுணர்வும் நிறைந்த இடையறாத மனவுலைவு நிலை. எளிதில் உணர்ச்சி வயப்படும் பைத்திய நிலையில் இது உண்டாகிறது.

agitographia : எழுது நோய்.

agitophasia : பேச்சு நோய்.

aglomerular : சிறுநீர் வடிப்பு முடிச்சற்ற.

aglossia: நாக்கு இன்மை.

aglossotomia ; பிறவியில் வாய்நாக்கு இன்மை.

aglutination : குருதியணு ஒட்டுத்திரள்; ஒட்டுத்திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரிகள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல்.

aglutition : விழுங்க முடியாமை.

aglycone : குருதிச் சர்க்கரை இன்மை : இரத்தத்தில் சர்க்கரை இல்லாமை.

aglycosuric : சர்க்கரை இல்லாமை.

agmatology : எலும்பு முறிவியல்.

agnathia : தாடை வளர்ச்சிக் குறைபாடு; கீழ்த் தாடையின்மை : தாடை வளர்ச்சியின்றியோ முழுமையாக வளர்ச்சியடையாமலோ இருத்தல்.

agnea : பொருளறிய முடியாமை.

agnogenic : பிறப்பிடம் தெரியாத; நோய் முதல் அறியாத; நோய் மூலம் அறியாத.

agnosia : புலனுணர்வு இன்மை; அறிந்துணராமை; நுண்ணுணர்விழப்பு : புலனுணர்வுகளை உணர இயலாதிருத்தல்.

agogue : அகோகு : தொடர்புச் சொல்.

agomphious : பல் இல்லாமை.

agonadal : பாலுறுப்பு சுரப்பி இல்லாமை.