பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/880

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pons varoli

879

porin


pons varoli : மூளை இணைப்பு; நரம்புப் பாலம் : மூளையின் இரு பாதிகளையும் இணைத்து மூளையின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கின்ற நரம்பிழைத் தொகுதி.

pontiac fever : பாண்டியாக் காய்ச்சல் : சளிக்காய்ச்சல் (இன்ஃபுளுயென்சா) போன்ற ஒருவகைக் காய்ச்சல். இது நுரையீரல் தொடர்பானது அன்று.

popliteal : முழங்கால் பின்பகுதி சார்ந்த : முழங்காலின் பின் னாலுள்ள குழிவுக்குரிய.

popliteus : பின்கால் தசை; தசை; முழங்காலின் : துடையின் பிற் பகுதி சார்ந்த இடத்திலுள்ள ஒரு தசை. இது காலை மடக்கவும் சுழற்றுவதற்கும் உதவுகிறது.

poradenitis : பின் சிறுகுடல் அழற்சி : பின் சிறுகுடல் சுரப்பிகளில் வலியுடன் ஏற்படும் திரட்சி. அரையாப்புக் கட்டியின்போது இது உண்டாகிறது.

porcelain doll face : போர்செலெய்ன் பொம்மை முகம் : தைராயிடு குறை சுரப்பில் கிளைக்கோ அமைனோகிளைக் கான்கள் சேர்ந்துவிடுவதால், பெரியவர்களில் முகம் வீங்கி வெளுத்து மிக்ஸெடீமா எனும் அடிச்சவ்வு வீக்க நிலை.

pore : நுண்துளை / மயிர்க்கண்; சிறுதோல் ஓட்டை; புரை : வியர் வைச் சுரப்பிகளுக்குச் செல்லும் நாளங்களின் ஒரு வாய். தோல் மேற்பரப்பில் இவற்றை நுண்ணிய அடுக்குத் தசைகள் கட்டுப்படுத்து கின்றன. குளிரில் இது சுருங்கி அடைபட்டும் வெப்பத்தில் விரிவடைந்தும் இது நடைபெறுகிறது.

porencephalitis : குழிய மூளை அழற்சி : மூளைத் திசுவில் குழி வறைகள் உண்டாகும் மூளையழற்சி.

porin : போரின் : கசிவுப் பாதையாகச் செயல்படும் கிராம் சாய மேற்காத கிருமிச் சுவர்களின் வெளிச்சவ்விலுள்ள வோல்ட்டேஜ் வாயிலமை சவ்வுச் செல்வழி.