பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/882

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

portal círculation

881

positron


அழுத்த மிகைப்பு : கல்லீரல் சிரையில் அழுத்தம் அதிகரித்தல் இது பொதுவாக ஈரலரிப்பு காரணமாக உண்டாகிறது.

portal circulation : கல்லீரல் சிரை; இரத்தவோட்டம்; சுற்றோட்டம் : குடல், கணையம், மண்ணிரல், இரைப்பை ஆகியவற்றின் இரத்தம் இதயத்திற்குத் திரும்புவதற்கு முன்பு ஈரலில் சிரையினால் சேகரிக்கப்படுதல்.

portal vein : கல்லீரல் சிரை; வாயில் சிரை : கல்லீரலுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் சிரை. இது 75 மி.மீ. நீளமுடையது. இது குடற்குழாய்ச் சவ்வுச் சிரைகள் ஆகியவை இணைந்து அமைந்தது.

portocaval : வாயில் பெருஞ்சிரைய : வாயில் சிரையையும் கீழ்ப் பெருஞ்சிரையையும் இணைக்கும் அறுவை மருத்துவத்தில் வாயில் சிரை மண்டலத்திலிருந்து இரத்தம் கீழ்ப் பெருஞ்சிரைக்கு திருப்பப்படுவதால் வாயிற்சிரை மிகையழுத்தம் குறைகிறது.

portoenterostomy : வாயிற்சிரை குடல் திறப்பு : பித்த நாளமின்மை கொண்ட ஒரு இளங்குழந்தையின் பித்தநீர் செல்ல வழியுண்டாக்கும் அறுவை முறை. இதில் நடுச்சிறு குடல், கல்லீரல் வாயிலுறுப்புகளுடன் அறுத்திணைக்கப்படுகிறது.

portography : வாயில் வரைபதிவு : மண்ணிரல் அல்லது வாயில் சிரைக்குள் ஒரு எக்ஸ்ரேயில் காணக்கூடிய நிற ஊடகப் பொருளை ஊசி வழியாக செலுத்தி வாயில் இரத்த சுழற்சியை எக்ஸ்ரே படப்பதிவு செய்தல்.

portosystemic : வாயில் மண்டல : வாயில் மண்டல மற்றும் உடற்சிரை மண்டலங்களுக்கிடையேயான இணைப்புகள் பற்றியது.

port-wine naevus : போர்ட் ஒயின் நிறமறு : பிறவி நரம்பு நாளக்கோளாறு, தோலில் கரும்சிவப்பு-ஊதா மறுக்களாகத் தோன்றுதல்.

position : இருப்பு நிலை; இருக்கை; இருப்பிடம்.

positive pressure ventilation : ஆக்கமுறை அழுத்தக் காற்றூட்டம்; நேரழுத்த மூச்சோட்டம் : மூச்சு உள்வாங்குவதற்காக நுரையீரல்களில் ஆக்கமுறையில் காற்றழுத்தம் ஏற்படுதல். நுரையீரல் சுருங்குவதன் மூலம் மூச்சு வெளியேறுகிறது இயக்கழுத்தக் காற்றேற்றம்.

positron : போசிட்ரான்; நேர்மின்னேற்றி : மின்னணுவின் அதுபோன்ற எதிர்த் துகள். ஆனால் நேர்மின்னேற்றங் கொண்டது.