பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/883

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

posseting

882

posthumous


posseting : பத்தியப் பாலூட்டல் : குழந்தைகளுக்குக் கட்டிப் பாலைச் சிறிது சிறிதாகக் கொடுத்தல்.

postcardiotomy : இதய வைக்குப்பின் : இதயத்திறப்பறுவைக்குப் பிந்திய காலம் பற்றியது.

postcaval : பெருஞ்சிரைப்பின் : கீழ்ப்பெருஞ்சிரைக்குப்பின்னுள்ளது பற்றியது.

postcentral : மையப்பின் : 1. மையத்துக்குப் பின்னால், 2. ரோலன்டோ பிளவுக்குப் பின்னால்.

Postericoid web : கிரைக்காய்டுப் பின்வலை : இரும்புக் குறை சோகையில், உணவுக்குழல் சீதச்சவ்வின் மடிப்பு ஒன்று விழுங்கும்போது கஷ்டமாக உள்ளது.

posterior : பின் : 1. புறம் அல்லது முதுகுநோக்கி, 2. பின் அமைந் துள்ள 3. வால் நுனிப் பக்கம்.

posterior urethral valve : சிறுநீர்ப்புறவழிப் பின்புறத் தடுக்கிதழ் : பின்புறச் சிறுநீர்க்குழல் தடுக்கிதழ்கள்.

posteroanterior : பின்முன் : பின்னாலிருந்து முன்னாக அசைவு அல்லது பாய்தல் பற்றியது.

postanaesthetic : மயக்க மருந்தூட்டியபின் உணர்வகற்றுப் பின்.

postanal : மலவாய்ப் பின்புறம்.

postcoital : புணர்ச்சிக்குப் பின் : கருத்தடை உறையைப் பயன்படுத்திப் பாலுறவு கொண்டதன்பின்.

postconcussional syndrome : தலைமோதல் நோய்; தலைக் காயத்தின்பின் மயக்கம் : தலைக் காயம் ஏற்பட்டபின் ஏற்படும் தலைவலி, மயக்கம், மயக்கவுணர்வு போன்ற நோய்க் குறிகள்.

postdiptheritic : தொண்டையடைப்பான் பின்னோய் : தொண்டை யடைப்பான் நோய்த்தாக்குதலுக்குப் பிறகு உண்டாகும் உறுப்பு வாதம். மேல்வாய் உணர்வின்மை போன்ற நோய்க்குறிகள்.

posteruption : முளைத்துப்பின் : பல் முளைப்பதில் ஒரு படி நிலை. இதில் பல் அடைப்புத் தளத்தை அடைந்துள்ளது.

posthepatic : நுரைஈரல் பின்புறம், ஈரலின் பின்னால்.

postherpetic : அரையாப்புப் பின்புறம்.

posthitis : மானி நுனிவீக்கம்; மானி முனை அழற்சி.

posthumous : மரணத்தின் பின்; இறப்புக்குப்பின் : 1. தந்தை இறந்தபின் குழந்தை பிறத்தல்.