பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/884

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

postictal

883

postprimary tuber..


2. தாய் இறந்தபின், தாயின் வயிற்றிலிருந்து குழந்தையை அறுவை மருத்துவம் முலம் வெளியில் எடுத்தல்.

posticta : வலிப்புப்பின் : ஒரு வலிப்பு அல்லது மூளைத் தாக்கத்தைத் தொடர்ந்து.

postload : பணிச்சுமைப்பின் : இதய வெளிப்பாடு மாற்றத்தினால் இதயத்துக்கு வேலை அதிகரித்தல்.

postmature : முதிர்ச்சிப்பின் : 42 வார கருவளர்ச்சிக்குப்பின் பிறந்த இளம் குழந்தையைக் குறிக்கும். 2. கணக்கிடப் பட்ட நாளுக்குப் பின் பிறந்த குழந்தை.

postmature baby : மாதங்கடந்த குழந்தை : எதிர்பார்த்த தேதிக்குப் பிறகு பிறந்த குழந்தை. 40 வாரங்களுக்கு அப்பாலும் வயிற்றிலிருந்து தாமதமாகப் பிறக்கும் குழந்தை.

postmenopausal : மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பின்.

postmortem : சடலப் பரிசோதனை; பிண ஆய்வு; பிணக் கூற்றாய்வு; மரணப் பின் ஆய்வு : இறப்புக்குப் பின் சடலத்தை அறுத்துப் பரிசோதனை செய்தல்.

postmyocardial infarction syndrome : மாரடைப்புப்பின் நோயியம் : தொடர்ந்து காய்ச்சல், இதய உறையழற்சி, துரையீரலுறை நோய் ஆகியவை ஒரு மாரடைப்பு (இதயத் தசையழிவு)க்குப் பின் சில வாரங்கள் அல்லது மாதங்களில் தோன்றுதல், தற்காப்புத்தடுப்பாற்றல் காரணமாக இருக்கலாம்.

postnasal : மூக்குப் பின்புறம்; மூக்கின் பின்னால் : மூக்கிற்குப் பின்புறம் மூக்குத்தொண்டையில் அமைந்துள்ள.

postnatal : பேறுகாலத்திற்குப் பின்; பிறந்தவுடன்; பிறந்த பின் : குழந்தை பிறந்தபின் நிகழ்கிற.

postpallium : பேல்லியப்பின் : ரோலன்டோ பிளவுக்குப் பின்னுள்ள மூளைப் புறணியைக் குறிக்கும்.

postpartum haemorrhage : பேறு காலத்திற்குப்பின் இரத்த இழப்பு : பேற்றுக்குப்பின் ஒழுக்கு.

postoperative : அறுவை மருத்துவத்திற்குப்பின்; அறுவைக்குப் பிற்பாடு.

postpartum : பேறுகாலத்திற்குப் பின்; பேற்றுக்குப் பின்னர்.

postprandial : உணவுக்குப் பின்னர்.

postprimary tuberculosis : முதல்நிலைப்பின் டியூபர்குலோசிஸ் : முதல்நிலைத் தொற்றுக்குப்பின், மைக்கோபேக்டீரியம்