பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/885

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

poststenotic

884

potassium deficiency


கிருமிக்கு எதிரான தடுப்பாற்றல் உருவான சில வாரங்களில் தோன்றும் டிபெர்குலோசிஸ்.

poststenotic : குறுக்கப்பின் : குறிப்பாக ஒரு தமனியில் குறுக் கப்பகுதி அல்லது சுருங்கிய பகுதிக் குதூரமாக.

postural : தோற்றம் சார்ந்த.

posture : தோற்ற நிலை; உடல் இருக்கை நிலை; தோரணை; இருப்பு நிலை : முழு உடலின் தோற்ற அமைப்பு அல்லது தோற்றத்தின் ஒரு பகுதி.

post urethral instislation : புறச்சிறுநீர் குழலைத் தாண்டி ஒழுக்குதல்.

postvaccinal : அம்மை குத்தியபின்.

potabla-6 : பொட்டாசிப்லா-6 : பொட்டாசியம் பாராமினோ பென்சினேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

potassium chlorate : பொட்டாசியம் குளோரேட் : இலேசான நோய் நுண்மத்தடை வாய்கழுவு மருந்துகளிலும், தொண்டைகழுவு நீர்மங்களிலும் பயன் படுகிறது. பொட்டாசியம் குளோரைடிலிருந்து வேறுபட்டது.

potassium chloride : பொட்டாசியம் குளோரைடு : பொட்டயத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் கரைசல், தையாசைடு சிறுநீர்க் கழிவு மருத்து வத்தியிலும் பயன்படுத்தப் படுகிறது.

potassium citrate : பொட்டாசியம் சைட்ரேட் சிறுநீரைக் காரத் தன்மையடையச் செய்கிறது. இன்னும் சிறுநீர்க்கட்டி முதலியவற்றில் பயன்படுகிறது. சல்ஃபோனாமைடு மருத்துவத்தின் போது சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்கப் பயன்படுகிறது.

potential : ஆற்றல் : 1. செய்யும்திறன் படைத்த உள்ளே மறைந்திருக்கும், இயலக்கூடிய, 2. ஒரு மின் ஆதாரத்திலுள்ள செயல்படும் திறனுள்ள, மின் அழுத்த நிலை.

potentiation : ஆற்றலூட்டம் : கூட்டிப் பார்ப்பதைவிட பெரிய அளவுடைய, ஒத்திசைவாற்றல்.

pottassium cyanide : பொட்டாசியம் சையனைடு : மிகக் கொடிய நஞ்சு வகை.

potassium deficiency : பொட்டாசியம் பற்றாக்குறை; பொட்டாசியம் குறைபாடு : மின் பகுப்புச் சம்நிலை சீர்குலைதல். அளவுக்கு அதிகமான வாந்தியின்போது அல்லது வயிற்றுப் போக்கின்போது ஏற்படுகிறது.