பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/889

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

precipitum

888

preeclampsia


precipitum : மண்டல் : ஒரு பிரெசிபிடின் செயலால் உண்டாகும் ஒரு படிவு.

'preclinical : மருத்துவ முன் நிலை; நோய் தோன்று முன்நிலை : 1. நோய் தோன்றுதவற்கு முன் னால், 2. உடல் கூறு இயல் உடலியக்கவியல், உயிர் வேதியியல் ஆகிய பாடங்களைப் படிக்கும் மருத்துவக் கல்வியின் முதல்நிலை.

precoecious : வயது மீறிய வளர்ச்சி.

preconscious : உணர்வு நிலைக்கு முற்பட்ட : முன் பட்டறிவுகளையும், நினைவுப் பதிவுகளையும் உணர்ந்து நினைவுக்குக் கொண்டு வரும் மனநிலை.

precordia : முன்மார்பு : கீழ் மார்புக்கூட்டின் முன் பரப்பும் மேல் வயிற்றுப் பகுதியும்.

precordial : இதயத்திற்கு முன்புள்ள : நெஞ்சுப் பைக்கு அடுத்து முன்புள்ள.

precomu : முன்கொம்பு : மூளையின் பக்க நீரறையின் முன்நீட்டம்.

precostal : விலாவெலும்புக்கு முன்புள்ள : விலாவெலும்புகளுக்கு முன்புள்ள.

precuneus : ஆப்புமுன் : மூளை அரைக் கோளத்தின் உள்பரப்பில் ஒரு பிரிவு. இது பக்க நடு நுண்மடலுக்கும் ஆப்பு நுண் மடலுக்கும் நடுவில் உள்ளது.

precursor : முன்னோடி; முன் பொருள் முன்னோடி; முன் நிலை : 1 மற்றொன்றுக்கு முன்வரும் ஒரு பொருள். 2 மற்றொன்றிலிருந்து செய்யப்படும் ஒரு பொருள்.

predigestion : முற்செரிமானம் : உணவை உண்பதற்கு முன்னர் செயற்கையாக எளிதாகச் செரிமானமாகக் கூடியதாகச் செய்தல்.

predisposition : இயற்சார்வு நிலை : இயற்கையாகவே சில நோய்கள் பிடிப்பதற்கான அல்லது ஏற்படுவதற்கான நிலை.

prednisolone : பிரட்னிசோலோன் : இணைப்புத் திக நோய்கள், நோய்த் தடைக் காப்புக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தக் கொடுக்கப்படும் ஒரு செயற்கை இயக்குநீர் (ஹார்மோன்).

prednisone : பிரட்னிசோன் : நுரையீரலில் பிரட்னிசோலோனாக மாறும் மருந்து. இது பிரட்னிசோலோன் கொடுக்கப்படும் நோய்களுக்கே கொடுக்கப்படுகிறது.

preductal coarctation : முன் நாளச் சுருக்கம் : தமனி நாளத்துக்கு முந்திய பெருந்தமனிச் சுருக்கம். இதனால் உடலின் கீழ்பகுதி நீலம் பாரித்தல்.

preeclampsia : கர்ப்பகால வலிப்பு நோய் : பேற்றுக்கு முன்