பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/891

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

premature baby

890

preparation


premature baby : குறைமாதக் குழந்தை; முற்றாக் குழந்தை : உரிய காலத்திற்குமுன் பிறக்கும் குழந்தை, குறைமாதக் குழந்தையின் எடை 2.5 கிராமுக்குக் குறைவாக இருந்தால் அதற்குத் தனி மருத்துவமளிக்க வேண்டும்.

prematurity : முதிராநிலை : 37 வார கருவுற்ற காலத்துக்கு முன்பாகவே பிறந்த குழந்தை முழு வளர்ச்சியடையாமலுள்ள நிலை.

premedication : மருந்துக்கு முன் மருந்து; முன்னோடி மருந்து; முன் மருந்து : ஒரு மருந்தைக் கொடுப்பதற்கு முன் கொடுக்க வேண்டிய மருந்து. எடுத்துக்காட்டாக, மயக்க மருந்து கொடுப்பதற்கு முன்னர் கொடுக்கப்பட வேண்டிய மருந்து. இவை உறக்க மூட்டும் மருந்துகள், எச்சில் சுரப்புத் தடுப்பு மருந்துகள் எனப் பல வகைப்படும்.

premelanosome : முன்மெலனோசம் : அடர்ந்த குருளை போன்ற உள்ளிட்டையும் கரிய அணுக்களின் குறுக்குக்கோடுகளையும் கொண்ட ஒரு நீள்வட்ட அமைப்பு.

premenarche : பூப்படையாமுன்.

premenstrual : முந்திய மாத விடாய்; மாத விலக்குக்கு முன்.

premolar : முன் கடைவாய்.

premolar tooth : முன் கடைவாய்பல்; முன் கடைப்பல் : கடைவாய்ப் பல்லுக்கு முன்னுள்ள பல், கதுப்புப்பல்.

prenatal : பேறுகால முன்; பேற்றுக்கு முன்; பிறப்புக்கு முன் : பேறுகாலத்திற்கு முந்திய கடைசி மாதவிடாய்க்கும் குழந்தை பிறப்பதற்கும் இடைப்பட்ட காலம் இது பொதுவாக 40 வாரங்கள் அல்லது 280 நாட்கள் ஆகும்.

prenatal syphilis : பிறவிக் கிரந்தி.

prenylamine : பிரனிலாமைன் : குருதி நாள விரிவகற்சி மருந்துகளில் ஒன்று. இடது மார்பு வேதனைதரும் இதய நோயின் போது கொடுக்கப்படுகிறது.

preoperative : அறுவைக்கு முன்பு; அறுவை முன் : அறுவை மருத்துவத்துக்கு முன்பு.

preparalytic : வாதத்திற்கு முன்பு; வாத முன்னோடி : வாதநோய் எற்படுவதற்கு முன்பு பொதுவாக இளம்பிள்ளை வாதத்தின் தொடக்க நிலையைக் குறிக்கும்.

preparation : முன்னேற்பாடு; தயாராதல் : நோயளியை அறுவை மருத்துவத்துக்கு தயார் செய்தல், விளக்குவதற்கான மாதிரிப் பொருளை அமைத்தல் பயன் படுத்துவதற்காக மருந்தை தயார் செய்தல் போன்ற முன்னேற்பாடு.