பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/892

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

prepatellar

891

presso receptor


prepatellar : மூட்டுச் சில்லுக்கு முன் : கால்மூட்டுச் சில்லுக்கு (முட்டுச்சிப்பி) முன்பு, இது மசகு நீர்ச்சுரப்பியைக் குறிக்கும்.

preperception : முன்உணர்நிலை: புலன்களைக் கொண்டு உணர்வதற்கு முந்தைய நிலை.

prepotent : மிகுதிறன் : பெற்றோர் இருவரில் ஒருவருக்கு பரம்பரைப் பண்புகளை குழந்தைக்கு வழங்கும் சக்தி அதிகமாக இருத்தல்.

prepubertal : பூப்புக்கு முன்; பருவமடையும் முன் : பூப்புப் பருவம் எய்துவதற்கு முன்பு.

prepuce : மானி நுதி; முன்தோல்; ஆண்குறி நுனியுறை : ஆண்குறி நுனிக் கவசம்.

presbiopia : வெள்ளெழுத்து; கிட்டப் பார்வைக் குறைவு; முதுமை பார்வைக் குறை; வெள்ளெழுத்து; சாளே சுரம்; முதுமங்கல் : கிட்டப் பார்வைக் குறை பெரும்பாலும் 45 வயதுக்கு மேல் ஏற்படுகிறது.

prescribe : மருந்துக்குறிப்பு : ஒரு மருந்துப் பொருளை, தயாரிப் பதற்கும் உட்கொள்வதற்குமான அறிவுரைகள் கொடுப்பது.

prescription : மருந்துச்சீட்டு; மருத்துவ மருந்துக் குறிப்பு; மருந்து வரைவு; மருந்தெழுத்து : தேவையான மருந்துகள் கொடுப்பதற்கு மருந்துக் கடைக்காரருக்கு அறிவுறுத்தி மருத்துவர் எழுதக் கொடுக்கும் மருந்துப் பட்டியல்.

presenility : முதுமைக்கு முன்; மூப்புக்கு முன் : முதுமை முன்னால் முதுமைக்கு முன்பு ஏற்படும் நிலை.

present : தோன்றல்; இருத்தல்; பார்வைக்கு வரல் : தோன்றுதல், முன்னிலையில் அறிமுகம் செய்தல், பரிசோதனைக்காகப் படுத்திருத்தல்

presentation : பிறப்புத் தோற்றம்; கருக்குழந்தைப் பகுதி; பிறக்கும் போது தோற்றம் : இடுப்பெலும்பு விளிம்புக்குள் முதலில் நுழையும் கருப்பைக் குழந்தையின் பகுதி. இதனை வயிற்று வலியின்போது பரிசோதிக்கும் மருத்துவர் விரலால் தொட்டுப் பார்க்கலாம். இது உச்சந்தலையாக, முகமாக, கண்ணிமையாக, தோளாக அல்லது பிட்டமாக இருக்கலாம்.

preservative : பதனப்பொருள் : கெட்டுப்போகாமலிருப்பதற்காக உணவுப் பொருள்கள் அல்லது மருந்துகளுடன் சேர்க்கப்படும் ஒரு பொருள்.

pressor : அழுத்தி; குருதி அழுத்த மிகுபொருள்; அழுத்த ஊக்கி : இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு பொருள்.

pressoreceptor : அழுத்தம் ஏற்பி : பெருந்தமனி மற்றும் கழுத்துப் புழையில் காணப்படும் இரத்த