பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/893

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pressure

892

prickly heat


அழுத்த மாற்றங்களைக் காட்டும் அழுத்த ஏற்பி.

pressure : அழுத்தம்; அழுத்தப் பகுதி; அழுந்திடங்கள் : உடலில் எலும்புகள் முனைப்பாகத் தெரியும் பகுதி படுக்கையில் அல்லது நாற்காலியில் இருக்கும் நோயாளிகளுக்கு இந்தப் பகுதிக்கு இரத்தம் செல்வது புற அழுத்தம் காரணமாகக் குறைந்துவிடும்.

pressure point : அழுத்தப்புள்ளி; அழுந்திடம் : இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளமாகிய ஒரு தமனி, ஒரு எலும்பின் மேலாகச் செல்லும் ஒர் இடம். இந்த இடத்தில் அழுத்தி, குருதிப் போக்கை நிறுத்தலாம்.

pressure sore : அழுத்தப்புண்; அழுந்து புண் : அழுத்தம் காரணமாக உண்டாகும் சீழ்ப்புண்.

presuppurative : சீழ்முன்நிலை : சீழ் உண்டாவதற்கு முன்னால் அழற்சிப் படிநிலைகளில் ஆரம்பநிலை.

presymptomatic : முன்அறிகுறி : ஒரு வியாதி வெளிப்படையாகத் தெரிவதற்கு முந்திய உடல்நிலை.

presynaptic : முன்சந்திப்பு : நரம்பிழைகளின் சந்திப்புக்கு முன் அமைந்துள்ள பகுதி சந்திப்புப்பிளவுடன் தொடர்புடைய நரம்பு வேரிழை வீக்க முடிச்சு.

presystole : இதயச் சுருக்கத்திற்கு முன் : குருதிநாளச் சுருங்கியக்கத் திற்கு அல்லது இதயத் தசைச்சுருங்கியக்கத்திற்கு முந்திய காலம்.

preurethritis : தாரையழற்சி முன்நிலை : தாரைத்துளையைச் கற்றியுள்ள யோனிப் பகுதி அழற்சி.

prevalence : நோய்ப் பகுதி; நோய்பரவுநிலை : ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு பகுதி மக்கட் தொகுதியில் நோயால் பாதிக்கப் பட்டிருப்பவர்களின் அளவெண். இதை அறிய நோயாளிகளின் எண்ணிக்கையை, மக்கள் தொகையின் எண்ணிக்கையால் வகுத்தல்,

preventive : தடுப்பு நிலை : 1. முள் காப்பு. 2. ஒரு நோய் உண்டாகும் அபாய நிலையில் தடுக்கக்கூடிய ஒன்று.

preventive paediatrics : குழவி நோய்த்தடுப்பு மருத்துவம்.

prezonular : வெளிமுன் : கண் பின்னறையில் விழிக் கரும்படலத் துக்கும் தொங்கு பிணையத்துக்கும் இடையிலுள்ள இடம் தொடர்பான.

priapism : ஆண்குறி விறைப்பு; குறிவிறைப்பியம் : பாலுணர்வுத் தூண்டுதல் இன்றியே ஆண்குறி நீண்ட நேரம் விறைப்பாகி இருத்தல். நோயால் ஏற்படும் விறைப்பு.

prickly heat: வேர்க்குரு : வியர்வை நாள அடைப்பினால் தோலில்