பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/896

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

proband

895

procercoid


proband : முன்மாதிரி : பாதிக்கப் பட்ட ஒருவரிடம் துவங்கி ஒரு பரம்பரையை ஆய்வு செய்வது வரைபடம் உருவாக்குவது.

probang : நோயறிகம்பி : முனையில் ஒரு பஞ்சுப் பொருள் இணைக் கப்பட்ட ஒரு மெல்லியவளை கம்பியை பயன்படுத்தி குரல் வளையில் குறுக்கம் இருக்குமிடத்தை கண்டறிதல் மருந்து தடவவும் பயன்படும்.

probe : துழாவு கருவி : 1. குமிழ் முளைகொண்ட ஒரு மெல்லிய கம்பி, திறப்பு கொண்ட உடல் பகுதியில் துழாவிப்பார்க்கப் பயன்படுத்துவது. 2. டிஎன்ஏ ஆய்வுக்குப் பயன்படும் முக்கிய கருவி.

problem-based learning (PBL) : சிக்கல் அடிப்படையான படிப்பு : ஒரு சிக்கலுக்கு தீர்வு காண்பதன் மூலம் அல்லது புரிந்து கொள்ள மேற்கொள்ளும் முறைகளின் விளைவாக கற்றறிதல்.

problem-based medical curriculum : நோய் நிலை அடிப்படையான மருத்துவக் கல்வி : அடிப்படை மருத்துவ அறிவியலையும் நோயாளியைப் பரிசோதிப்பதையும் ஒருங்கிணைத்த கல்விமுறை.

problem-oriented medical record : பிரச்சினை அடிப்படையிலான மருத்துவப் பதிவேடு : நோயாளியின் நிலையை அவர் உணர்ந்த வகையிலும் பரிசோதனையில் தெரிந்த வகையிலும் ஒழுங்கு செய்து, முறையாக பதியப்பட்ட மருத்துவப் பதிவேடு.

procainamide : புரோக்கைனாமைடு : புரோக்கைன் வழிப் பொருள்களில் ஒன்று தானியங்குத் தசைகளைத் தளர்ச்சியடையச் செய்வதற்குப் பயன் படுகிறது. இதனை வாய்வழியாகவோ, சிறிது சிறிதாக நரம்பு ஊசி மூலமாகவோ கொடுக்கலாம்.

procaine : புரோக்கெய்ன் : ஒரு சமயம் மிகப் பெருமளவில் உறுப்பெல்லை உணர்ச்சி நீக்க மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட மருந்து நச்சுத்தன்மை குறைந்தது; மிகுந்த வீரியமுடையது. இப்போது இதற்குப் பதிலாக லிக்னோகைன் பயன்படுத்தப்படுகிறது.

procarbazine : புரோக்கார்பாசின் : நைட்ரஜன் மருந்துகளின் ஒன்று. கடுகுக் குழுமத்தைச் சேர்ந்தது. ஹாட்கின் நோய்க்குப் பயன் படுத்தப்படுகிறது.

procercoid : நாடாப்புழுவின் கூட்டுப்புழு : நாடாப் புழுவின் நீர் வாழ்க்கையில் முதல் கூட்டுப் புழுநிலை. கூட்டுப்புழு பொரித்தவுடன் ஒரு நீர்ப்பூச்சியால் உண்ணப்படுவதால் ஏற்படும் நிலை.