பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/897

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

procerus muscle

896

proctoscope


procerus muscle : புரோசிரஸ் தசை : மூக்குத் தோலிலிருந்து புறப்பட்டு, நெற்றியில் இணைந்து உள்ள தசை, இது கண்புருவத்தை கீழே இழுக்கிறது.

process : முற்புடைப்பு; துருத்த வளர்வு : ஒர் உறுப்பின் புற வளர்ச்சி அல்லது புடைப்பு.

processor : உருக்காட்டு பொறி : மறைந்துள்ள உருவத்தை காணத் தகும். உருவமாக மாற்ற உதவும் தானியங்கிப் பொறி. இது கதிர்ப் படவியலில் பயன்படுகிறது.

prochlorperazine : புரோக் குளோர்ப்பெராசின் : ஃபெனாத்தியாசின் மருந்துகளில் ஒன்று. உறக்க முட்டக்கூடியது வாந்தியைத் தடுக்கவல்லது கடுமையான குமட்டலையும், வாந்தியையும் தடுக்கப் பயன்படுகிறது.

procidentia : கருப்பை நழுவல்; கருப்பைத் தொங்கல் : கருப்பை முற்றிலுமாக நழுவி, யோனிக் குழாய் உட்பையினுள், ஆனால் உடல் மட்டத்திற்கு வெளியே அமைந்திருத்தல் கருப்பை இறக்கம்.

proctalgia : மலக்குடல் வலி : மலக்குடல் பகுதியில் உண்டாகும் வலி.

procttis : மலக்குடல் அழற்சி : மலக்குடலில் ஏற்படும் வீக்கம். துகள் சவ்வுப் படலம் வீங்குவதால் இது உண்டாகிறது.

proctocolectomy : குடல் அறுவை : மலக்குடலையும் பெருங்குடலையும் அறுவை மருத்துவ மூலம் வெட்டி யெடுத்தல்.

proctocolitis : மலக்குடல்-பெருங்குடல் அழற்சி : மலக்குடலிலும் பெருங்குடலிலும் ஏற்படும் வீக்கம். பொதுவாக சீழ்ப்புண் உண்டாகும் வகை.

proctodeum : குதக்குழி : வளர் கருவின் பின்குடலின் இறுதிப் பகுதியில் புறத்தொலி வரியமைந்த பள்ளம். இதிலிருந்து குதத்துளையும் சிறுநீரிய செனிப்பி வெளித்துளையும் உருவாகின்றன.

proctologist : மலக்குடல் மருத்துவர் : பெருங்குடல், நேர் குடல் மற்றும் குதநோய்கள் மருத்துவத்தில் சிறப்புத் தகுதி பெற்றவர்.

proctology : மலக்குடலியல் : பெருங்குடல், நேர்குடல் மற்றும் குதநோய்கள் தொடர்பான சிறப்பு அறுவையியல்.

proctoparalysis : குதசெயலிழப்பு : குதச் சுருக்கு தசையின் செயல் இழப்பால், மலம் ஒழுகுதல்.

proctoscope : மலக் குடல் ஆய்வுக் கருவி; மலக்குடல் நோக்கி; மலக்குடல் காட்டி : மலக்குடலைப் பரிசோதனை செய்வதற்கான ஒரு கருவி.