பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/898

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

proctosigmoiditis

897

profilin


proctosigmoiditis : மலக்குடல் வளைப்பெருங்குடல் அழற்சி; மலக்குடல் நெறியழற்சி : மலக்குடலிலும் வளைவுப் பெருங்குடலிலும் உண்டாகும் வீக்கம்.

proctostomy : குதத்துளை அறுவை : நேர்குடலில் செயற்கையாக ஒரு திறப்பை அறுவை மூலம் உண்டாக்கல்.

procyclidine : புரோசைக்ளின்டின் : தசைச் சுரிப்பு நோய்த் தடுப்பு மருந்துகளில் ஒன்று. பார்க்கின்சன் நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. இது தசை விறைப்பைக் குறைக்கும். ஆனால் நடுக்கத்தைக் குறைப்பதில்லை.

prodexin : புரோடெக்சின் : வயிற்றுப் புளிப்பு அகற்றும் மாத்திரை மருந்தின் வணிகப் பெயர். இதில் அலுமினியம் கிளைசினேட் மக்னீசியம் கார்பொனேட் அடங்கியிருக்கிறது.

prodromal : நோய் முன்குரறி : நோய்க்கு முந்திய அடையாளங்கள்.

proencephalus : மூளைத்துருத்தம் : நெற்றிப் பகுதியில் ஒரு பிளவின் வழியே மூளைத் துருத்தும் முதிர்கருவின் உருவக்குறை.

proenzyme : நொதிமுன்நிலை : 1. ஒரு நொதியின் செயலற்ற முன் நிலைப் பொருள். அதை செயல்பட செய்ய சில மாற்றம் தேவை. 2. சைமோஜென்.

proerythroblast : முதிரா செவ்வணு முன்நிலை : சிவப்பணு வளர்ச்சியில் முதலில் அறியப்படும் உயிரணு நிலை.

proerythrocyte : முதிரா சிவப்பணு : ஒரு உட்கருவைக் கொண்ட முதிரா சிவப்பணு சிவப்பணுவுக்கு முந்திய வளர்ச்சி நிலை.

proestrus : பூப்புமுன்நிலை : பூப்படைவதற்கு முன், கர்ப்பப்பையின் உள்வரியும், (கருப்) சினைப்பையின் சுரப்புச் சிறு பைகளும் வளர்தல்.

professional : தொழிலாளுநர் : 1. செய்தொழில் சார்ந்த 2 ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்து செயல்படும் ஒருவர்.

profile : உருப்படிவம் : 1. நோயறி சோதனைகளின் தொகுதி ஒன்றுகொண்டு அடிநிலையை நிலைநாட்டி, பெருமளவு நோயறி செய்திகளை அறிதல். 2. எந்தவொரு பகுதிக்கும் பயன்படும். நலவாழ்வு கவனிப்பு பற்றிய தரவுகளின் குறுக்கு வெட்டுத் திரட்சி.

profilin : புரோஃபைலின் : தட்டணுக்களிலும் நிறமேற்கா வெள்ளணுக்களிலும் உள்ள ஒரு புரதம் புற்றுத் தோன்றுவதிலும், குருதி உறைகட்டி தோன்றுவதிலும் அணுத்தோற்ற மாறுதல்களை உண்டாக்க ஈடுபடும் ஆக்டின் இழைகளின் நீளத்தை ஒழுங்குபடுத்துகிறது.