பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/900

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

prokaryon

899

promoter


அவர்கள் அறியாமலேயே அமையும் ஒருவகை உளவியல் நேர்வு. இது மனநோய் அறிகுறி, முக்கியமாக அறிவுப் பிறழ்ச்சி. இந் நோய் கண்டவர்கள் தனது உணர்வுகளுக்கு மற்றவர்கள் காரணம் என்று குற்றஞ்சாட்டுவார்கள்.

prokaryon : புரோகேரியான் : உயிரணுவின் உட்கூழ் முழுவதும் இரைந்துள்ள உட்கருப்பொருள், அதைச் சுற்றி அணுப்படலமில்லை.

prolapse : உறுப்புப் பிறழ்ச்சி; கருப்பை நெகிழ்ச்சி; வெளித் தள்ளல்; பிதுக்கம்; சரிவு : உடலுறுப்புகள் இடம் பெயர்தல், கருப்பை நெகிழ்ச்சி அல்லது மலக்குடல் இடம்பெயர்வு.

prolapse uterus : கருப்பை நெகிழ்ச்சி; கருப்பைப் பிதுக்கம்.

prolapsus : உறுப்புப் பெயர்ச்சி : கருப்பை அல்லது மலக்குடல் இடம் பெயர்தல்.

proliferate : உயிரணுப் பெருக்கம் : உயிரணு பகுபட்டு எண்ணிக்கை பெருகுதல்.

proliferative phase : பெருகிப் பல்கும் நிலை : மாதப்போக்கு சுழற்சியில் முட்டை வெளிவருதற்கு முந்தியநிலை முட்டையை உள்ளேற்க கருப்பை உள்வரி நன்று தடித்து தயாராதல்.

proliferous : பெருக்கநிலை : இனப்பெருக்க ஒரே மாதிரியான திசுவணுக்கள் எண்ணிக்க அதிகரித்தல்.

promazine : புரோமாசைன் : துயிலூட்டும் மருந்துகளில் ஒன்று. மதுபானத்திற்கு அடிமையாகி இருப்பதைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

prometaphase : நடுநிலைமுன் : உயிர்மப் பிளவியக்கப்படி நிலையில் உட்கருப்படலம் சிதைவுற்று, நிறக்கூற்றுகள் நடுக்கோட்டுத் தகடு நோக்கி செல்தல்.

promethazine : புரோமித்தாசின் : பயண நோய்க்குப் பயன்படும் மருந்து. பயணத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு இதை அருந்தலாம். இது 6-12 மணி நேரம் வேலை செய்யும்.

promonocyte : ஒற்றையணு முன்நிலை : முதிரா ஒற்றையணு மற்றும் ஒற்றையணுவுக்கும் இடைநிலை உயிரணு.

promontory : புடைப்பு : 1. நடுச்செவியின் நீள்வட்ட சன்னலுள்ள மேலுள்ள புடைப்பு, நத்தை உருவின் அடித்திருப்பத்தைக் குறிக்கிறது. 2. முதல் திரிக எலும்பின் முன் மேல் விளிம்பு.

promoter : செயலூக்கி : 1. டிஎன்ஏ ஈரிழைத் தளத்தில் ஆர்.என்.ஏ பாலிமெரேஸ்கள்