பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/901

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pronasion

900

prophase


கட்டுச் செய்து, மரபணுப் படியெடுத்தலைத் தூண்டுதல், 2. ஒரு செயலூக்கியை செயல்படுத்தும் பொருள்.

pronasion : மூக்கடிப்புள்ளி : நாசித்தடுப்புக்கோணம் மற்றும் மேலுதட்டுப் பரப்புக்கும் இடையிலுள்ள புள்ளியிடம்.

pronation : புறம்திருப்புதல் : குப்புற நிலையில் வைத்தல் அல்லது அந்த நிலைக்கு திரும்புதல்.

pronator : கைகவிழ்த் தசை; உட்புரட்டி; புறனுருட்டி : கையைக் கவிழ்த்து வைப்பதற்கு உதவும் தசை.

prone : முன்கவிந்த; புரளல்; குப்புற : முகங்கவிந்து படுத்திருத்தல், நெடுஞ்சாண் கிடையாகக் குப்புறப்படுத்திருத்தல்.

pronephros : சிறுநீரக மூலம் : ஒரு முதனிலை சிறுநீரக நாளம் வழியாக கழிவுப்பைக்குள் வடிக்கும் ஒரு வரிசையமைந்த வளைவு நெளிவு நுண்குழல்கள் கொண்டு வளர்நிலை சிறுநீரகம்.

prong : கவர்முள் : 1. ஒரு கவைக்கோல் அல்லது அது போன்ற கருவியின் கூர்முனை. 2. ஒரு பல்லின் வேர் போன்ற கூம்பு போன்ற பொருள்.

pronometer : திருப்பல்மானி : முன்கையின் முன் திருப்பல் மற்றும் பின் திருப்பல் அளவைக் கண்டறியும் கருவி.

pronormoblast : இயல்பரும்பணு மூலம் : இயல்பு அரும்பணு வளர்ச்சியில் ஆரம்பநிலை. சிவப்பணு மூல வளர்நிலை.

pronucleus : உட்கருமூலம் : விந்தணு அல்லது கருவணுவில் கருவுறுத்தலின் பின் உள்ள உட்கருப்பொருள். ஒவ்வொன்றும் ஒரு தொகுதி (ஒற்றைப்படை) நிறக்கீற்றுகளைக் கொண்டது.

propantheline : புரோப்பந்தெலின் : இரைப்பை வாயில்நோய், உணவுப்பாதைப் (சீரணப்பாதை) புண் முதலிய நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கைக் கூட்டுப்பொருள். இது சில நோயாளிகளுக்கு வாய் உலர்வை உண்டாக்கும்.

propeptone : பெப்டோன் முன்நிலை : புரதம் சீரணிக்கப்படுவதில் பெப்டோனாக மாறும் போது இடைநிலைப் பொருள்.

properdin : பெர்டின்முன்நிலை : இறுதிநிலை பகுதிப் பொருள்களின் நிரப்புப் பொருளை செயல்படுத்தும் மாற்று வழியில் கலந்துகொள்ளும் ஊநீரின் குளோபுளின் பகுதி.

prophase : முன்படிநிலை : இழையுருப் பிரிவு அல்லது ஒடுக்க பிரிவின் முதல்படி நிலை. இதில் நிறக்கீற்றுகள் தடிமன் அதிகரித்து மையப்புரிபிளந்து செல்லின் ஒருமுனை நோக்கி இரு கிளை மையப்புரிகள் நகர்கின்றன.