பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/902

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

prophylactic

901

prospective study


prophylactic : நோய்த் தடுப்பு மருந்து; முற்காப்பு; தடுப்பு முறை : நோய்த் தடுப்பு முறை நோயைத் தடுக்கிற.

prophylaxis : முற்காப்பு; நோய்த்தடுப்பு; மருத்துவம்; நோய்த் தடுப்பு; தடைமுறை : நோய்த் தடுப்பு மருத்துவம்; நோய்த்தடுப்பு முயற்சி.

propionibacterium : முன் அணுத்துகள் : பால் பொருட்களில் காணப்படும் அழுகல் வளர், கிராம் சாயமேற்கும் நுண்ணுயிரிகள் இவை தோலிலும் குடல் பாதையிலும் உள்ளவை நோயுண்டாக்கக்கூடும்.

propranolol : பிரோப்ரேனலால் : நெஞ்சுவலி, இதயத் துடிப்பு லயக் கோளாறுகள் மற்றும் இரத்தக்கொதிப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பீட்டா அண்ணிரேற்பித்தடை மருந்து.

proprietary name : வணிகப் பெயர் : மருந்தாக்க நிறுவனம் தான் தயாரிக்கும் மருந்துக்குக் கொடுக்கும் பெயர்.

proprioception : ஊடுணர்வு :உடலுக்குள்ளிருந்து எழும் உணர்வுத்துண்டல்கள் கொண்டு சமநிலை மாற்றங்களையும் இருக்கை நிலை மற்றும் இயக்கங்களை அறிந்துணர்தல்.

proptosis : விழித்துருத்தம்; விழிப்பிதுக்கம் : விழி முன்புறமாகப் பிதுங்கி இருத்தல்.

propulsion : முன்விழுதல் : பார்கின்சன் வியாதியில் காணப்படும் நடக்கும்போது முன் பக்கம் விழுந்துவிடுவது போன்ற நிலை.

propylthiouracil : ஃபுரோஃபில் தையோராசில் : கேடயச் சுரப்பி இயக்கத்தை மட்டுப்படுத்துகிறது. சில சமயம் கேடய நச்சுச் சுரப்பி நோய்க்குப் பயன் படுத்தப்படுகிறது. அதி தீவிர கேடயச் சுரப்பு இயக்க நச்சுத் தன்மையைக் கட்டுப்படுத்தும்.

prosection : உள்ளுறுப்புக் கூறாய்வு : ஒரு பிணத்தை அல்லது ஒரு உடல் பகுதியை உடற்கூற்றுக் காட்சி விளக்கத்திற்காக பகுத்தாய்தல்.

prosodemic : ஆட்பரவல் : நேரடியாக ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் நோயைக் குறிக்கிறது.

prosopopagus : முகமொட்டிய இரட்டையர் : சமமற்ற இரட்டைக் குழந்தைகளில் ஒன்று மற்றொன்றின் முகத்தின் மேல் பகுதியில் ஒட்டியிணைந்துள்ளது.

prospective study : வருவதையறிய சோதனை : ஒரு ஆய்வின் ஆரம்பம் முதல், சோதனை முடியும்வரை, நோயாளிகளில் அல்லது நலமுள்ளவர்கள் சந்திக்கும் மருத்துவ, சமுக, சூழல்காரணிகளால் ஏற்படும் பாதிப்பை சோதித்து அல்லது பரவு நோயியல் முறையில்