பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/907

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

protopathic

906

provitamín


protopathic : உணர்வுக் குறைவு : ஊறுணுர்ச்சி குறைவாக இருக் கக்கடத்தும் உணர்வு நரம்புகளைக் குறிக்கும்.

protoplasm : ஊன்மம் (மும்கனியம்) : நீர், தாதுப்பொருள், கரிய கூட்டுப் பொருள்கள் அடங்கிய ஒரு உயிரணுவின் உயிர்ச்சத்துப் பொருள்.

protoplast : மூலமுதல் : 1. உள்ளடங்கிய படலமில்லாத உயிரணுவின் ஊன்மம் 2 மூலம்.

protospasm : முதல் சுரிப்பு : 1 : ஒரு பகுதியில் துவங்கி மற்ற பகுதி களுக்குப் பரவும் கரிப்பு (இசிவு).

prototype : மூலமுன் மாதிரி : ஆதி காலவகை ஒரு முல மாதிரியிலிருந்து பின்வரும் பிரதிகள் உருவாதல்.

protozoa : ஓரணுவுயிர்; ஒற்றையணு உயிரி : நுண்ணிய ஒரணு உயிர்ப் பிரிவைச் சேர்ந்த உயிர்கள்; நோய்களை உண்டாக்கும் ஓரணு உயிர் நுண்மங்கள்.

protraction : முன்நீட்டல் துருத்தல் : பற்கள் அல்லது தாடையமைப்புகள் இயல்பான நிலைக்கு முன் பக்கமாக, துருத்திக் கொண்டிருத்தல்.

protractor : நீட்டிப்பான் : 1. பின்னிழுக்கும். தசைக்கு மாறாக ஒரு பகுதியை முன்னிழுக்கும் தசை 2 காயங்களிலிருந்து வேற்றுப்பொருள்களை வெளியிலெடுக்கும் கருவி.

protriptyline : புரோட்ரிப்டிலின் : சோர்வகற்றும் மருந்துகளில் ஒன்று விரைவாக வேலை செய்யக் கூடியது. இது உறக்க முட்டு வதில்லை.

proud flesh : தழும்பு : ஆறிவரும் புண்ணைச் சுற்றி வளரும் தசை.

protrusion : முன்துருத்தல் : 1. முன்னால் நீட்டியுள்ள அல்லது துருத்தியுள்ள நிலை. 2. கீழ்த்தாடை முன் துருத்திய நிலை.

provirus : வைரஸ்முன்நிலை : ஒரு ஏற்பு செல்லின் மரபணுத் தொகுதிக்குள் இணைந்துள்ள வைரஸ் செல்பிளவின் போது ஏற்பு செல்லின் வழித் தோன்றல்களுக்கு நேரடியாக ஏந்திச் செல்லப்படுகிறது.

provisional : தற்பொழுதைக்கான : 1. தற்காலிக, 2. கிடைத்துள்ள உடல்நிலையடிப்படையில் முடிவு. 3. சோதனையான.

provitamin : வைட்டமின் முன் பொருள்; முன்னுயிர்ச் சத்து: முன்வைட்டமின் : வைட்டமினுக்கு முன்னோடியான ஒரு பொருள். கரோட்டின், வைட்டமின்-ஏ ஊட்டச் சத்தாக மாற்றப்படுகிறது.