பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/908

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

provocative tests

907

pseudo bulbar paralysis


provocative tests : தூண்டும் சோதனைகள் : நோயின் அறி குறிகளையும் உணர்குறிகளையும் தற்காலிகமாக அதிகரிக்க வைத்து நோயை உறுதியாக அறிய வடிவமைக்கப்பட்ட சோதனை.

proximal : அணுக்க நோக்கு; மையம் நோக்கிய; நெருங்கிய; அண்மைய : உடலின் மையத்தை நோக்கி அமைந்துள்ள.

proximity of blood : அணிமை உறவு : மிக நெருங்கிய உறவு முறை.

proximoataxia : மேற்பகுதி ஒத்திசையாமை : உறுப்புகளின் மேற்பகுதித் தசைகளின் ஒத் திசையாமை.

prozone : புரோசோன் : விளைவிய அல்லது எதிர்மிய அளவுக்கதிக நிலையால் குறிப்பாக ஒரு பிரெசிபிட்டின் மறுவினைகளில் உள்ள எதிர்மிய மிகையால், ஏமக்காப்பு மறுவினையின் செயலிழப்பு.

prune belly : வற்றிய வயிறு : வயிற்றுச் சுவர்த் தசைகள் இல்லாமையால், வற்றிய தோற்றம் கொண்ட ஒட்டிய வயிற்றுச் சுவர்.

prune belly syndrome : வயிற்று நலிவு நோய் : ஆண் குழந்தைகளின் அடிவயிற்றுத் தசை மண்டல் மெலிவடைந்து வயிறு வற்றிக் காணப்படும் நோய்.

pruned tree appearance : காய்ந்த மரத்தோற்றம் : மைய நுரையீரல் குருதி உறை கட்டியடைப்பில் நுரையீரல் தமனி வரைவுப்படத் தோற்றம்.

prurigo (pruritus) : அரிப்பு கொப்புளம்; தோல் அரிப்பு நோய் சொறி : குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் தோல் அரிப்பு நோய்.

pruritus : தோல் அரிப்பு; அரிப்பு; நமைச்சல்.

Prussian blue : பிரஷ்ஷியன் நீலம் : ஜெர்மனியிலுள்ள பிரஷ் வியாவின் பெயரைக் கொண்டு ஒரு அடர் நீல நிறம் தோன்றுவதன் மூலம் தாமிரமிருப்பதைக் காட்டப் பயன்படும் ஒரு வேதியசாயப் பொருள்.

pseudoangina : போலி இதய வலி; இடது மார்பு பொய் வலி : இடது மார்பில் ஏற்படும் போலியான வேதனை. இதில் உண்மையில் இதய வலி ஏற்படுவதில்லை. கவலை கொண்டவர்கள் தங்களுக்கு இத்தகைய வலி இருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள்.

psudoarthrosis : போலி மூட்டு : ஒன்றிணையாக எலும்பு முறிவின் காரணமாக உண்டாகும் போலிமூட்டு, முன்கால் எலும்பில் பிறவியில் ஏற்படுவதுண்டு.

pseudo bulbar paralysis : போலி நாக்கு வாதம்; போலி முகுள வாதம் : நாக்கின் ஒரு புறத்தைச்