பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/909

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pseudo cholinesterase

908

pseudomenstruation


செயலிழக்கச் செய்யும் வாத நோய். அடுத்தடுத்து ஏற்படும் தாக்குதல்களினால் மூளைக் கோளாறு ஏற்படக்கூடும்.

pseudo cholinesterase : போலி கோலினெஸ்டிராஸ் : குருதி நீரில் உள்ள நரம்புத் திசு அல்லாத மற்ற திசுக்களிலும் காணப்படும் ஒரு செரிமானப் பொருள்கள் (என்சைம்). இது நுரையீரலில் சேர்த்து இணைக்கப்படுகிறது.

pseudocrisis : போலி நெருக்கடி : உடலில் வெப்பம் விரைவாகக் குறைந்து ஒரு நெருக்கடிபோல் தோன்றுதல். இதனைத் தொடர்ந்து காய்ச்சல் அதிகரிக்கும்.

pseudo cyesi : போலிக் கர்ப்பம்; கருவுற்ற பொய்யுணர்வு; போலிச் சூல்.

pseudodiabetes : போலி பொய் நீரிழிவு : நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பில் போன்று குளுக்கோஸ் ஏற்புக்குறை காட்டும், கார்போஹைட்ரேட் மாற்றக் குறை.

pseudodiphtheria : டிப்தீரியா போலி : தொண்டை அடைப்பான் (டிப்தீரியா) போன்ற ஒரு நோய்.

pseudoglobusins : போலி உருளைப் புரதங்கள்.

pseudo hermaphrodite : போலி இருபால் இனப்பெருக்கச் சுரப்பி; போலி இருபாலி : ஒருவரிடம் ஒரு பாலினத்தின் இனப்பெருக்கச் கரப்பிகள் இருந்து, புற இனப்பெருக்க உறுப்புகள் எதிர்ப் பாலினத்தினுடையதாக இருத்தல்.

pseudojaundice : பொய்காமாலை : இரத்தத்தில் கெரோட்டின் மிகையால், காமாலை போன்று தோன்றும் தோல் நிறமேற்றநிலை.

pseudologia fantastica : கற்பனை நோய் : நம்ப முடியாத கற்பனைப் பொய்களைக் கூறி, அவற்றை வலியுறுத்தும் மனப்போக்கு சில இசிப்பு நோயாளிகளிடமும் மனநோயாளிகளிடமும் இது காணப்படும்.

pseudolymphoma : நிணப்புற்றுப்போலி : நினவணுக்களின் எண்ணிக்கை மிகுதியாக அமைந்த நிணமிகை வளர்ச்சி.

pseudomembrane : பொய்ப் படலம் : தொண்டைமன வாய்ப்பகுதியில், ஒரு மெல்லிய ஒட்டிய சாம்பல் வெள்ளைக் கசிவை அகற்றினால் இரத்த ஒழுக்கு நிகழும். நிறமேற் காவனுக்களையும் திசு வழிவு எச்சங்களும் அக்கசிவிலுள்ளன.

pseudomeningitis : மூளையுறையழற்சிப் போலி : மூளையுறை அழற்சியில்லாமல் முளையுறையழல் போல் தோன்றும் நிலை.

pseudomenstruation : போலி மாதப்போக்கு : கர்ப்பப்பையின்