பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

akinesthesia

90

albicomtes


akinesthesia : இயக்க உணர்விலா.

akinetic : இயக்கமின்மை; அசைவற்ற : உடல் இயக்கம் இல்லா திருக்கும் நிலை.

aknephaschopia : குறையொளி பார்வையற்ற.

akinetic epilipsy : அசைவற்ற வலிப்பு : வலிப்பில் ஒருவகை இவ்வகை வலிப்பு நோயாளியானவர் சிறிதளவு தசை இயக்கம் குறைந்தவுடனேயே மயக்கமடைந்து (சுயநினை விழந்து) தரையில் விழுந்து விடுவார். கைகால்கள் வெட்டி வெட்டி இழுப்பதில்லை.

akinetic deaf mutism : இயக்கக் குறை கேட்பு பேச்சுப் புலனின்மை; இயக்குக்குறை செவிட்டு ஊமை : மூளை பாதிப்பிலிருந்து சிறிதளவு உடல் நலமடைந்த நபர். இவரால் அருகில் நடப்பதை உணரமுடியும். ஆனால் பேச முடியாது. நடக்க முடியாது, காது கேட்காது.

akinesthesia : இயக்க உணர்வின்மை : உடல் இயக்கத்தை உணர இயலாத நிலைமை.

akineton : அக்கினட்டோன் : 'பைபெரிடன்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.

ala : இறக்கையுரு.

alacrima : கண்ணிர் சுரப்பின்மை : கண்ணிர் குறைவாகச் சுரத்தல் அல்லது கண்ணிர் முழுவது மாகச் சுரக்காதிருத்தல்.

alactasia : லேக்டோஸ் உறிஞ்சாமை : சிறுகுடலின் உறிஞ்சு பரப்பில் உள்ள பாதிப்பின் காரணமாக லேக்டோஸ் நொதியை உறிஞ்ச இயலாத நிலைமை.

alalia : வாய்பேச இயலாமை : குரல்களை வாதத்தின் காரண மாகப்பேச இயலாத நிலை.

alangiumsalvifolium : அழிஞ்சி.

alanine : அலனின் : புரதப் பொருளில் காணப்படும் ஒரு வகை அமினோ அமிலம்.

alanine amino transferase : அலனின் அமினோ இடமாற்றி.

alanine transaminase : அலனின் டிரான்ஸ்அமினேஸ் : மனித தசை, கல்லீரல், மூளை ஆகியவற்றில் காணப்படும் ஒருவகை அமினோ நொதி, எல் அலனின் எனும் அமினோ அமிலத்தை 2 கீட்டோ குளுட்ரேட்டாக மாற்றுவதற்கு இந்நொதி பயன்படுகிறது.

alastrim : சின்னம்மை : பெரிய அம்மை நோயை விடச் சற்று கடுமை குறைந்த அம்மை நோய்.

alba : வெண் ; வெண்மை ; வெள்; வெள்ளை.

albedo : வெண்மையாதல்.

albidus : வண்மை.

albicomtes : வெண்; வெண்மையான.